பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கரிப்பு மணிகள்

வேலுவைக் குறித்து அவர் கத்த, மாமி அழ, இங்கும் ஒரே கலவரமாக இருந்தது. பனம் கூட யாரிடமோ கடன் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்.

‘ஏலே, முடியில கொஞ்சம் எண்ணெய் தொட்டா என்ன?’ என்று மாமி கரிசனத்துடன் கேட்டு, எண்ணெய் புரட்டச் சொல்கிறாள். பெட்டியிலிருக்கும் நல்ல சராயையும், சட்டையையும் எடுத்துக் கொடுத்து அவனை அணியச் சொல் கிறாள்.

“இவன் போயிட்டா எனக்குக் கையொடிஞ்ச மாருதி யாயிரும். நா பெத்த பயலுவவுட இவம் மேலதா எனக்கு உசுரு. துலாவில பாத்திக்குத் தண்ணி எறய்ப்பா. எங்க ஆம்பிள அங்ஙன இங்கன போயிட்டேயிருப்பா. சுசய்ட் டின்னும் சங்கம்னும் அவியளுக்கு சோலி. உப்பு எறங்கி யிருக்கு மாமின்னு வந்து சொல்லுவா. நானும் அவனுமே வாரி வய்ப்பம். ஒரு நா இரு பரவங்களோடு வள்ளத்தி லேறிப் போயிருக்கா. நா காணாம தவிச்சிப் போனே. பொன்னாசிசியும் அப்படித்தே. அவ முடி சிவிச் சட போடலின்னா எனக்கு ஒறக்கம் புடிக்காது.” என்றெல்லாம் மாமி அருமை பெருமைகளை வாரி விடுகிறாள்.

குத்தியக் கம்பைப் போட்டுக் கிண்டி இறக்கிவிட்டு, மாமி மீன்கண்டம் வாங்கி வந்து குழம்பு வைக்கிறான்.

பொன்னாச்சிக்கு இது கனவா, நினைவா என்று புரிய வில்லை. எல்லாம் சுரவேகத்தில் நடப்பது போலிருக்கிறது. என்றாலும் அன்பான மாமனுக்குத் தெரியாமல் சொல்லாமல் இத்தனை நாள் வளர்ந்த இடத்தைவிட்டுப் போகலாமா?

  • மாமா என்னமே நெனச்சுக்க மாட்டாவளா...’

என்னேய பின்னே? அப்பச்சி ஒடம்பு சொகமில் லாம, கூட்டிட்டு வாரும்னு அனுப்பிச்சிக் கொடுத்திருக் கயில நாமும் போகண்டாமா? மர்மா வந்தாச் சொல்ற:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/35&oldid=657521" இலிருந்து மீள்விக்கப்பட்டது