பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கரிப்பு மணிகள்

சனையும், பொறுப்பில்லாத குழந்தைகளையும் திட்டி ஒய வில்லை. மழை அடித்து ஒய்ந்தாலும் நினைத்து நின்ைத் துச் சாரல் அடிக்கக் காற்று வீசுவதைப்போல் கிளம்பு கிறது.

முன் வாசலுக்கு நேராக உள்ள வீட்டிலிருந்து ரேடியோப் பாட்டு ஒலிக்கிறது. பச்சை அந்தப் பக்கம் செல் கிறான். இந்த முற்றத்தின் பக்கமாக உள்ள சன்னலின் அருகே நின்று அங்கே பார்க்கிறான், ஒரு ஆச்சி, டிரான்ஸிஸ்டர் பெட்டியைத் திருகி, பாட்டு வைக்கிறாள். அவனைக் கண்டதும், “இப்படி வாலே, ஒம்பேரென்ன?” என்று அவள் அழைக்கிறாள்.

பச்சை நாணிக் கோணிக் கொண்டு உள்ளே செல்கிறான். அந்த முன்னறையில் ஒரு பனநார்க்கட்டிலில் ஆச்சி அமர்ற் திருக்கிறாள். அங்கே இன்னொரு பெரிய பெஞ்சி இருக்கிறது. ஒருபுறம் கவரில் புத்தகங்கள் நோட்டுக்கள் தெரியும் ஷெல்ஃப், அதன்மேல், கவரில் உயரே ஒரு படம் இருக்கிறது. படத்தில் இளையவனாக அரும்புமீசையும் நேர்ப்பார்வையு மாக ஒரு பிள்ளை விளங்குகிறான். அந்தப் படத்துக்கு மஞ்சளும் நீலமும் கலந்த பட்டு நூல் மாலை போட்டிருக் கிறார்கள்.

பச்சை அந்தப் படத்தையே பார்க்கையில், ஆச்சி அவனிடம் ‘படிக்கிறியாலே?” என்று கேட்கிறாள். ரேடியோவில் பாட்டு இல்லை. பேச்சு வருகிறது. அதை அனைத்துவிட்டு, ஒரு காகிதப்பையில் இருந்து வேர்க் கடலையை எடுத்து உரித்துத் தின்கிறாள்.

அவனிடமும் இரண்டு கடலையைப் போட்டவாறே மீண்டும், படிக்கிறியாலே? கேட்டதுக்கு வதில் சொல்லு’ என்று கேட்கிறாள்.

படிச்சேன், இப்ப நிறுத்திட்டே...” *ஏ...? சோலிக்குப் போறியா?” :மாமன் அளத்துல சோலி எடுப்பே. தம்பாட்

டளம்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/41&oldid=657533" இலிருந்து மீள்விக்கப்பட்டது