பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் & 9

“எம்புட்டு?’’

‘ரெண்டேக்கரு...’

அவள் உதட்டைப் பிதுக்குகிறாள். ‘அக்காளும் சோலிக்குப் போகுமா?” -

-இல்லே...வீட்டுவேல எல்லாம் செய்யும். எப்பன் னாலும், உப்புவாரிப் போடவரும்.”

“இங்கேயே இருக்கப்போறியளா?” பையன் தெரியாது என்று தலையசைக்கிறான்.

இதற்குள் அடுத்த வீட்டுக்காரி பெருங்குரலெடுத்து -ஏசுவது செவியில் விழுகிறது. பையன் முற்றத்துக்கு வரு கிறான். பொன்னாச்சியும் அங்கு நிற்கிறாள். பாஞ்சாலி தண்ணிர் கொண்டு வந்து வைத்துவிட்டு வாயிற்படியிலேயே நிற்கிறாள். குஞ்சுகளைப் பின்தள்ளிவிட்டு இரண்டு பெட்டிகள் ஒன்றை யொன்று தாக்கிக் கொள்வது போல் இருவரும் வாய்ச் சண்டை போடுசின்றனர்.

ஒருவழியாக ஒய்ந்து எல்லோரும் முடங்குகின்றனர். குழந்தைகள் எல்லோரும் பொட்டுக்கடலை, பழத்துடன் உறங்கிவிட்டனர். உள்ளே சின்னம்மாவும் படுத்து உறங்கி விட்டாள்;

பொன்னாச்சிக்கு உறக்கம் வரவில்லை. அன்று பகலே அவள் சரியாக உணவு கொள்ளவில்லை. பசி, குடைகிறது. அவளுக்குப் பல நாட்களில் இப்படித்தான் எதேனும் தின்ன வேண்டும் போல் பசி கிண்டும். பல்லைக் கடித்துக் கொண்டு திரும்பித் திரும்பிப் படுத்து உறங்க முயலுகிறாள்.

பொழுது விடிந்தால் அடுப்புக்கு வைக்க ஒரு குச்சி இல்லை. மருதாம்பாவுக்குச் சோறு எதுவும் பொங்க நேர மில்லை. பொன்னாச்சியை எழுப்பி, ‘ஏத்தா ஒங்கையில் இருக்கிற துட்டுல ரெண்டு வெறவும் அரிசியும் வாங்கி ஒல போட்டு பொங்கிக்கோ. நா அளத்துக்குப் போவனும், வங்காணியிட்டக் கேட்டு எதினாச்சிம் துட்டு வாங்கி வார.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/42&oldid=657535" இலிருந்து மீள்விக்கப்பட்டது