பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 கரிப்பு மணிகள்

வாயைக் கிளறி வம்புக் கிழுக்கிறாளா? இவளிடம் எப்படிப் பேசுவது? ஊரிலும் இவ்வாறு வாயைக் கிளறுபவர்கள் உண்டு. அவள் ஏதேனும் பேசிவிட்டால் மாமி நாள் நாராகக் கிழித்தெறிந்து விடுவாள்.

எனவே மெளனமாக நிற்கிறாள். -

“ஏட்டி பாஞ்சாலி ரெண்டு வெறவு கொன்டு ஒங்கக்காளுக்குக் குடு! அடுப்புப் பத்தவய்க்கட்டும்!” என்றவள் குரலை மிக மிகத் தாழ்த்தி, ஒங்கப்ப எடுத்துக் குடுத்து அதுக்கு வார காகக்கு என்னமேந் தின்னிடுவா. குடிய்க்கவுஞ் செய்வா. இது ஒள்ளதுதே!...” என்று தெரிவிக்கிறாள். பாஞ்சாலி இரண்டு விறகை எடுத்துக் கொண்டு வந்து வீட்டுத் திண்ணையில் வைக்கிறான்.

பொன்னாச்சிக்கு நா எழவில்லை.

“ஏட்டி, அரிசி இல்லேன்னா, மூலக்கடையிலே வாங்கிக்குடு!” என்றும் உத்தரவிடுகிறாள். பய ஒர் தம்பியா? சோலிக்குப் போவனா?”

“போவணும்...’

“சின்னாச்சி கங்காணியிடம் சொல்றன்னிச்சா?*

“ஒண்ணுஞ் சொல்லல. அவுசரமாப் போயிட்டாவ...”,

ஆமா காலமே அதிகப்படி எதுவானாலும் அட்டுச் சொமக்கக் கூலி கெடய்க்குமேண்ணு போயிருப்பா அவாத என்னவே? ஒன்னப்பச்சிக்குக் கண்ணு சுத்தமாத் தெரியல. அன்னிக்கு அளத்துள சோலியெடுக்கையில் கீழவுழுந்திட்டா ராம். பொறவுதா ஒங்களக் கூட்டி வர்ரமின்னு போனா...”,

மருமம் துலங்கிவிட்டது. ஆனால் என்னம்மா வேலை பற்றி எதுவும் சொல்லவில்லையே?

‘தம்பிக் தன்னாலும் எதானும் கூலிவேலை கெடச் சாத் தேவலை...’

பொன்னாச்சியின் கண்கள் ஒளிருகின்றன. ஒங்களால முடியுமா...’ என்று கேட்கும் ஆவல் அது. s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/45&oldid=657541" இலிருந்து மீள்விக்கப்பட்டது