பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கரிப்பு மணிகள்

உப்பு வாருறதுதா, என்ன வேலன்னாலும் முசிக்காம செய்யிவம்...’

ஆச்சி கண்களை இடுக்குக் கொண்டு சிறிது நேரம் யோசனை செய்கிறாள். பிறகு நீண்டதோர் சுவாசத்தை. வெளியாக்குகிறாள்.

“இங்கெல்லாம் லோக்கல் உப்பில்ல, கல்கத்தா அனம். வரி உப்பு வாருவாக. அதெல்லாம் ஆம்பிளதா வாருபலவை. போடுவா.

பொம்பிளக்கிப் பண்பாட்டு சோலியும். பொட்டி செமக்கிற சோலியுந்தா, என்னைப்போல பொண்டுவ. ராவுல உப்பு அறவக்கொட்டடியிலும் வேலக்கிப் போவாக. நாளொண்ணுக்கு எனக்கு நாலு நாலரை வரை வரும். தம்பிக்கு ரெண்டரை மூனு வரும். இப்ப ரேட் ஒசத்தியிருக்காண்ணு சொன்னா...”

பொன்னாச்சிக்கு அந்தக் கணத்திலேயே பணஞ்சோலை அவனத்துக்குப் பறந்து போய்விட வேண்டும் போலிருக்கிறது. ஒரு நாளைக்கு அவளுக்கும் தம்பிக்குமாக ஆறுரூபாய் என்று வைத்துக்கொண்டாலும் கூட, மாசத்தில் நூற்றைம்பது ருபாய்க்கு மேல் வரும். மாமாவின் அளத்தில் மொத்த மாகக்கூட அவ்வளவு தேறாது மாமிக்கு அவளை எங்கேனும் அளத்தில் வேலைக்கு சேர்க்கலாம் என்ற யோசனை இருந் தாலும்கூட மாமா அதற்கு இடம் கொடுத்ததில்லை: அங்கிருந்து ராமக்காவும் கமலமும் கண்ணாடிக்காரர் அளத்துக்குப் போவார்கள். அவர்களுடன் அனுப்பி வைக்க ாைம் என்று மாமி கருத்து தெரிவித்ததுண்டு. ஆனால் மாமா மிகவும் கண்டிப்பானவர். அவள் இங்கே வந்து அளத்தில் வேலை செய்கிறாள் என்று தெரிந்தால்கூடப் புறப்பட்டு வந்து கூட்டிப் போனாலும் ஆச்சரியமில்லை.

ஆனால்.மாசத்தில் நூற்றைம்பது வருமானம்! பொழுது விடிந்து நிதமும் கம்புக்கும் கேழ்வரகுக்கும் அரிசிக்கும் மிளகாய்க்கும் பீராயப் போகவேண்டாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/47&oldid=657545" இலிருந்து மீள்விக்கப்பட்டது