பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 45

கடன் சொல்லிக் கடையில் சாமான் வாங்க வேண்டாம். தீபாவளிக்குப் புதிய சேலை போனஸ்...பிறகு கல்யாணம். அவளுடைய கண்களில் நீர்த்துளித்து விடுகிறது.

கல்யாணம் என்ற ஒன்றைப்பற்றி நினைக்கக்கூட முடியாத நிலை, அளத்தில் அவள் வேலை செய்கையில் அங்கேயே சோலி எடுக்கும் ஒரு ஆம்பிள்ளையைக் கட்டினால் இரண்டு பேருக்கும் பணம் கிடைக்குமோ?...

நினைக்கும்போது நெஞ்சு குழையும் நாணம் மேலிட்டு முகம் சிவக்கிறது. -

பாஞ்சாலியும் பச்சையும் சென்று அரிசியும் மிளகாய் புளியும் வாங்கி வருகின்றனர்.

அப்பன் எழுந்து மெள்ளப் பின்புறத்துக்கு நடக் கிறார். 1.

அவள் கையைப் பற்றிக்கொள்ளச் செல்கிறாள்.

“எனக்குப் பழக்கம் தாவுள்ள, நீ போ! வெறவு செவத்தாச்சி குடுத்திச்சா?” +

“ஆமா’

“அந்தாச்சி ரொம்பத் தங்கமானவுக முந்நூறு ரூவா கடனிருக்கு அவியக்கிட்ட, எப்படிக் குடுக்கப் போறம்...!” என்று பெருமூச்சு விட்டவாறே நடந்து செல்கிறான். சரசி அப்பனின் கைக்குச்சியை எடுத்துக் கொடுக்கிறாள்.

பொன்னாச்சி வறுமை அறியாதவளல்ல. ஆனால், இங்கு அடுப்பும்கூட இடிந்திருக்கிறது. நீர்ப்பானையும் கூடக் கழுத்தில் ஒட்டையாக இருக்கிறது. துணியைச் சுருட்டி அடைத்திருக்கிறார்கள். பித்தளை என்பது மாதிரிக்குக் கூடக் கிடையாது. அலுமினியம் குண்டான் ஒன்றைத் தவிர உருப்படியாக அப்பச்சியும் சின்னம்மாவும்சாப்பாடு கொண்டு செல்லும் அலுமினியம் தூக்குப் பாத்திரங்கள்தாம் இருக் கின்றன. தண்ணிர் குடிக்கக்கூடப் பித்தளையிலோ வெள்ளோட்டிலோ ஒரு சிளாசு இல்லை. பிளாஸ்டிக் தம்ளர்கள் இரண்டுதாம் அழுக்கேறிக் கிடக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/48&oldid=657547" இலிருந்து மீள்விக்கப்பட்டது