பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4s. கரிப்பு படிமணிகள்

ஆவாளியும் ஒழுகுகிறது. துணிக்கந்தையால் அடைத்திருக் திறார்கள். அவர்கள் வதியும் அறையும், சமைவல் செய்யும் பின் தாழ்வரையும் ஒட்டுக் கட்டிடங்களானாடலும் மிகப் பழைய நாளையக் கட்டிடமாக, பந்தல் போல் வெளிச்சத்தை திழுக விடுகிறது.

பொன்னாச்சி வீட்டை ஒட்டடை தட்டிப் பெருக்கி, மண்குழைத்துப் பூசி அடுப்பைச் சீராக்குகிறாள். ஒரு சோறு பொங்கி, குழம்பு வைத்து, குழந்தைகளுக்கும் அப்பனுக்கும் போடுகிறாள். பிறகு நல்லகண்ணு, மருது, சரசி எல்லோ ருக்கும் எண்ணெய் தொட்டு முடிசீவி, அழுக்குத் துணிகளை நீர் கொண்டுவந்து கசக்கிப் போடுகிறாள். தம்பி-சிவத்தாச்சி பிடம் சிநேகம் புடித்து விட்டான். அவனை எங்கோ கூட்டிசி சென்று பன ஒலை வாங்கி வருகிறாள் ஆச்சி.

அவளுக்குப் பெட்டி முடையத் தெரியும் போலிருக்கிறது. நாரைக் கிழிப்பதைப் பொன்னாச்சி வேடிக்கை பார்க் திறாள்.

அப்போது ஆச்சி இருக்காவளா?” என்ற” குரலொலி கேட்கிறது.

கரேலென்று குண்டாக, காதில் வயிரக்கடுக்கன்கள் |மின்ன, மேலே வெள்ளைவெளேரென்று சட்டையும் உரு மாலும் அணிந்து ஒரு பெரியவர் வந்திருக்கிறார். தலை முன். |புறம் வழுக்கையாகி, காதோரங்களில் வெண்மையாக நரைத் திருக்கிறது. *

வாயிற்படிக்கு நேராக முற்றற்தில் பொன்னாச்சி தான் நிற்கிறாள். அவளைப் பார்த்துத்தான் அவர் கேட்டிருக் இறார். அவள் சரேலென்று விலகிக் கொள்கிறாள். ஆன் ஒருவன் ஒரு சாக்கை (பத்துப்படி அரிசியோ தானியமோ இருக்கும் என்று தோன்றுகிறது) கொண்டு வந்து முன்புறம் இறக்குகிறான்.

‘ஆரு இவிய புதுசா இருக்கு?’ என்று கேட்டவாறு, அவர் மெத்தை நாற்காலியில் அமர்ந்து ஆச்சி கொடுக்கும் விசிறியால் விசிறிக் கொள்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/49&oldid=657549" இலிருந்து மீள்விக்கப்பட்டது