பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 47

‘கண்ணுசாமி இல்ல அவன் பிள்ளியதா. ஊரிலேந்து நேத்து கூட்டியாந்தா. அவனுக்குத்தா கண்னு தெரியல. சோலியுமில்லே...” .

“அப்பிடியா?” “ஆமா நா. நெனச்சிட்- நாச்சப்பங்கிட்டியோ, ஆறுமுவங்கிட்டியோ கலி எழுதிக்கிடச் சொல்லனுமின்னு. நீரே வந்திரு...” -

“முத்தன் அரிசி குத்தி வந்திருக்குன்னா. அன்னியே நீ சொன்னியே, சம்பா அரிசி வ்ேனுமின்னு, சரி எடுத்திட்டு வருவமின்னு வந்த அளத்துக் கோயில்ல கிருத்திக பூசைக்கு இன்னக்கிப் பெரியவிய போவனுமின் னா. அதும் சொல் லிட்டு இப்பிடி வந்தே. கோயில்ல முன் மண்டபம் கட்டிய பெறவு நீ பார்க்கவியே பெரிய மண்டபம் ட்யூப் லைட் டெல்லாம் போட்டு, வள்ளி கல்யாண சித்திர மெழுதியிருக்கா அளத்துக்காரவ ஒரு கலியாணம் காச்சின்னு திருச்செந்தார் போகண்டா...’ -

அவள் எங்கோ பார்த்துக் கொண்டு ஒலை கிழிக் கிறாள்.

“தா பாஞ்சாலி செம்பில நல்ல தண்ணி கொண்டா’

அவள் தண்ணிர் கொண்டு வந்ததும் வாயிலிருக்கும் சக்கைகளை முற்றத்து மூலையில்"கவரில் வாரியடிக்கத் : கிறார். பிறகு தண்ணிர்ால் வாயை அலசிக் கழுவிக் கொப்பு ளிக்கிறார்-மீண்டும் போய் உட்காருகிறார். -

“பெரியவிய ஒடம்பு ரொம்பத் தளந்து போச்சி. ஆரு வந்து கலியாணம் காச்சின்னாலும், 4- செலவுண்ணாலும் கோயில் காரியம்னர்லும் ஏன்னு கேக்குறதேயில்ல. பத்து இருவது தூக்கிக்கொடுக்கா. நேத்து கேட்டாவ. செந்தி லாண்டவங் கோயிலுக்கு மண்டபம் கட்டிய பெறகு செங்கமலம் வந்தாளாண்ணு. வரலான்னா ஏன் கூட்டி வந்து காட்டலேம்பாக, அதான் சொல்லிட்டுப் போலாமின்னு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/50&oldid=657552" இலிருந்து மீள்விக்கப்பட்டது