பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

சேல் பட்டு அழிந்தது. செந்தூர் வயல் பொழில் தேங்கடம்பின் மால் பட்டு அழிந்தது பூங்கொடி யார் மனம் மாமயிலோன் வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே...

கையிரண்டையும் தலைமேல் உயர்த்திக் குவித்துக், செந்தூர் முருகன் சன்னிதியில் மனங்குழைய நிற்கிறார் அருணாசலம். திருநெல்வேலி சென்று வருவதென்றால் வரும்போது அலைவாயில் மூழ்கி, முருகனைத் தரிசித்து அவன் காலடியில் மனச்சுமைன்ய இறக்கி ஆறுதல் தேடுவ தென்றும் அவருக்குப் பொருள்.

துரத்துக்குடி சென்று திருநெல்வேலிக்குச் செல்வதை விட, திருச்செந்துர் முருகனைக் கண்டு செல்வதென்றால் ஒர் ஆறுதல், வயது வந்த பிள்ளை, கல்வி வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டு தானும் முன்னுக்கு வந்து நாட்டின் பெரும்ைய்ை உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோள் ஒர் ரேகையளவும் இல்லாமல் அற்ப காரணங்களுக்காக அடிதடியிலா இறங்குவான்? கல்லூரி விடுதியில் இரண்டு கோஷ்டிகள் ஒருவருக்கொருவர் சண்டை, அதுவும் சாதிச் சண்டை விடுதி அறையில் சக்திவேல் ஒரு அரசியல் தலை வரின் பெயரை எழுதி வைத்தானாம். இன்னொரு மாண வன் அதை அழித்துவிட்டு வேறொரு அரசியல் தலைவரின் பெயரை சூட்டினானாம். இவர் ஒரு ஜாதி, அவர் ஒரு ஜாதி. ஆக நெருப்பு பொறி பறந்து அடிதடியில் மோதிக் கொண்டிருக்கிறார்கள்.

‘முருகா! நீ என்றைக்கு இவர்களுக்கெல்லாம் நல்ல புத்தியைக் கொடுக்கப் போகிறாய்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/53&oldid=657559" இலிருந்து மீள்விக்கப்பட்டது