பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 51

குடும்பம் அவற்றின் நிமித்தமான எண்ணற்ற பிரச் னைகள் எல்லாவற்றையும் சுழற்றி அவன் காலடியில் வைத்து விட்டுச் சிறிது நேரம் மெய்மறந்து நின்று. ஆறுதல் கொள்கிறார். பன்னீர் இவைப் பிரசாதமும் குங்குமமும் வாங்கிக் கொண்டு வெளியே வருகிறார்.

மரத்தடியில் நின்று ஈரவேட்டியை உயர்த்திப் பிடிக் இறார்.

கிழக்கே தகத்தகாயமாகத் தங்கக் கதிரவன் அவை வாயில் பட்டாடை விரிக்கிறான். எத்தனை நாட்கள் பார்த்திருந்தாலும் அலுக்காத காட்சி. சில நாட்களில் மனம் குழம்பி ஆற்றாமையில் அல்லலுறும்போது, பள். லாக்குக் கொடுக்கக் காசில்லாமல் பொடி நடையாக நடந்தே அலைவாய் முருகனைக் காண வந்திருக்கிறார். அந்தக் மேனியை நனைத்து, உள்ளத்தை அவன் கோலத்தில் நனைத்துக் கொண்டால் அந்தச் சுகமே தனி.

எத்தனை ஆண்டுகளாகவோ அலைவாய் முருகனைக் காண வருகிறார். இப்போது, எத்தனை மண்டபங்கள், எத்தனை கூட்டங்கள்! பயணிகளை ஏற்றி வரும் எடுரிஸ்ட்” பஸ்கள் கார்கள் என்று சந்நிதி முழுவதும் கும்பல். பயணி யர் விடுதிகள் வேறு மாடி மாடியாக எழும்பியிருக்கின்றன. ஆனால்...

முருகனைச் சுற்றி வேடக்காரர்கள் மலிந்து கிடக்கின் றனர். எங்கு பார்த்தாலும் எச்சில் துப்புபவனும், இயற். கைக் கடன் கழிப்பவனும், அங்கேயே இட்லி வாங்கித் தின் பவனும் படுத்துக் கிடந்து பிச்சை வாங்கும் கபடப் பண்டாரமும், தங்கள் செல்வ நிலையைத் தம்பட்ட மடித்துக் கொண்டு முருக பக்தியென்று கள்ளக் கண்ணிர் விடும் போலிகளும் அலைவாய் முருகனைச் சூழ்ந்திருக்கின் றனர். இதுதான் இன்றைய உலகின் ஒர் மாதிரித் துண்டு! வேட்டியை ஆட்டிக் காய வைத்து உடுத்திக் கொண்டு. சட்டையை அணிந்து கொள்கிறார் அருணாசலம். முதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/54&oldid=657561" இலிருந்து மீள்விக்கப்பட்டது