பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s2. கரிப்பு மணிகள்

நாளிர்வே எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. பசி வயிற்றை .கிண்டுகிறது.

நீண்ட சந்நிதித் தெருக் கொட்டகை வழியே நடந்து வருகையில் மண்டபத்தில் உள்ள ஐயர்கடையில் ஏறி அமர்ந்து கொள்கிறார்: மூக்குக்கண்ணாடியை மாட்டிக் கொண்டு காலைத் தினசரியைப் பார்க்கிறார். ஐந்து ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்து ஆச்சி அவரை மகனைப் பார்த்து வர விரட்டினாள். இன்னும் ஒரு ரூபாய் எழுபத்தைந்து பைசா மீதி இருக்கிறது. பஸ்ஸுக்குக் கொடுத்து, நான்கு இட்டிலியும் காப்பியும் சாப்பிட முடியும்.

அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது நயினார் பிள்ளை வருகிறான். ‘என்ன அண்ணாச்சி? எப்ப வந்திய?’ என்று கேட்டுக் கொண்டு அமருகிறான்.

நயினார்பிள்ளை அந்தக் காலத்தில் திருச்செந்தார் வட்டக் காங்கிரஸ் இயக்கத் தொண்டர்களில் அரும்பாடு பட்டுப் பெயரும் புகழும் பெற்றவன். கள்ளுக்கடை மறிய லுக்கு அவரும் அவனும் சேர்ந்து சென்றிருக்கிறார்கள். “ஸால்ட் இன்ஸ்பெக்டர் லோன் கொலைச் சதியில் சிறைக்குச் சென்று வந்தவன். இந்நாள் மண்டபத்தில் ஒரு புறம் தையல்கடை வைத்திருக்கிறான். பெண்கள் உடை கள் தைக்கிறான் அரசியலுக்கே வருவதில்லை. அவன் மட்டுமில்லை. அந்நாட்களில் ஆர்வமும் உண்மையுமாக நாட்டு விடுதலையையும் நல்வளர்ச்சியையும் நம்பிப் பாடு பட்ட தொண்டர்கள் எல்லோருமே இப்படித்தான் விலகி விட்டார்கள். o

எங்க இப்படி வந்திய தொழில் நிலம் எப்படி இருக்கு” H -

எப்படி இருக்கு? ஒண்னும் சொல்றதுக்கில்ல. நேத்துக்கூட டி. ஆர். ஒவைப் பார்க்கணுனும்தா தங்கி இருந்தேன். அமைச்சர் வந்திருக்கிறார்ன்னாவ. பெடிசன் எதுவும் தயார்ப்பண்ணிட்டுப் போகல. ஒண்னும் வாவன்னா இல்ல நயினாரு. அந்தக் காலத்துல ஒரு
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/55&oldid=657563" இலிருந்து மீள்விக்கப்பட்டது