பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 53

முடிவெடுத்தா எப்படி எல்லாரும் ஒத்துக் கிளர்ச்சியோ, எதுவோ பண்ணினம்? அவனுக்கு அப்பவும் பெண்சாதி: பிள்ளிய இல்லாமலா இருந்தாவ? இல்லாட்டா வெள்ளக் காரனை வெரட்டிருக்க முடியுமா? இப்ப ரொம்ப சுயநல மாப் போச்சு. அவனவன் தன் மட்டுக்கு நல்லா வந்திட னும், பணம் சம்பாதிக்கணும்னு எதுவும் செய்யிறான். 1947ல் இந்திய சர்க்கார் உப்புவரி வாணான்னு சட்டம் போட்டது. அந்தக் காலத்தில் காங்கிரசில் இருந்தவன். இல்லாதவன் எல்லோருமா ஒத்துமையாக் கூடித்தான், தூத்துக்குடி சப்கலெக்டரிடம் மகஜர் கொடுத்தோம். எங்களுக்கு நிலம் பட்டா போட்டுத் தரணும்னு அப் போதும் கூட்டுறவுச் சங்கமாவது இன்னொண்ணா வதுன்னு பணபலமுள்ளவன் எதிர்த்துத்தா மறிச்சான். அப்படியும் இருநூற்றைம்பது பேர் ஒத்துமையாக்கூடி இருந்ததால், இருநூறு ஏகராவுக்கு மேல் ஒதுக்கினாங்க, தன்பாட்டளம் செய்யுங்கள்னு அப்போது புறம்போக்கு. நிலம் குறிச்சுக் காட்டினோம், ஒதுக்கினாங்க. அப்போது இந்த ஒடை நடுவில் வந்து மறிக்கும். ஒடைக்கப்பால் ஆளையே விழுங்கும் தனி முதலாளியின் அளம். ஆயிரக் கணக்கான ஏக்கராகும்னு ஒரு நினைப்புமில்ல. கடோ சில் என்ன ஆச்சு? இருபது வருசமாகப் போவுது. ஒடை குறுக்கிடுவதால் பாதை இல்லை. லாரி வந்து உப்பெடுக்க முடியாது. அதனால, நாம அயன்ானவரி உப்புவாரினா லும் மூடை எட்டணாக்கும் முக்கா ரூபாய்க்கும் சீரழி யிது. வண்டிக்காரன் ஒடையில் இறங்கி வந்து முக்கால் ரூபாய் மூடைன்னு இங்கே உப்பெடுத்து அந்தால மூணு ரூபாய்க்கு விக்கிறான். அதனால, இந்தத் தம்பாட்ட னத்தில ஒண்ணும் முன்னுக்குவர முடியாதுன்னு அவன வன் நிலத்தைச் சும்மா போட்டு வச்சிருக்கான். முன்ன, இருபதம்ச திட்ட கானத்துல, இதுக்கு எப்படியானும் வழி’ பிறக்குமின்னு நம்பி, பாலத்துக்குத் திட்டமெல்லாம் போட்டு, பணம் செலவு பண்ணி எல்லாம் எழுதி எடுத் திட்டு தாங்க கலக்டரப் பார்த்தோம். அப்ப இதான் கேட்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/56&oldid=657565" இலிருந்து மீள்விக்கப்பட்டது