பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கரிப்பு மணிகள்

டாரு. இருநூறு ஏக்கராவில் பத்து ஏகராகூட நீங்க அனம் போடலியே? இது என்ன கூட்டுறவுன்னாரு. நிலம் வச்சி ருக்கிறவ அங்கங்க பிழைக்கப் போயிட்டான். அன்னிக்குக் காந்தி எதுக்கு உப்பு சத்தியாக்கிரகம் பண்ணப் போனாரு? ஒரு ஏழை, தன் கஞ்சிக்குப் போடும் உப்புக்கு வரிகொடுக்க வேண்டாம் என்பது மட்டுமல்ல, அவனவன் சொந்தமா பாடுபட்டு தன் நிலத்தில் விளைவெடுக்கணும். அவனு டைய தேவைக்கு அவன் சம்பாதிக்க முடியும்னு சொன்ன அந்த அடிப்படையில் தான் தன்பாட்டளம்னு லட்சியம் வச்சோம். இப்ப. ஆயிரக்கணக்கானத் தளிப்பட்ட முத லாளிகள் தன் பாட்டளம் பெருக்கியிருக்கா? குடும்பம் குடும்பமா அங்கே கொத்தடிமை செய்யப் போவுறாங்க. பொம்பிளப்பிள்ளைக, தாழக் குறுத்துப் போல, இம்மாட் டுப் பொடியலுவ, எல்லாரையும் கங்காணிய கண்ட்ராக் டுக, கூட்டிட்டுப் போறாவ. இதுக்கா சொதந்தரம் வாங் 1கினம்....”

அருணாசலத்துக்குப் பழைய நண்பர் கிடைத்து விட் டால் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்த்து விடுவார். வைத்த இட்டிலியை இன்னமும் தொடவில்லை.

‘இப்பக் காலம் அந்தக் காலம் இல்ல அண்ணாச்சி. எல்லாம் யாபாரம் தானிப்ப. தாய் மகன் தொடர்பு, புருசன் மனைவி பிரியம் எல்லாமே இது செஞ்சா இதுக்குப் பர்த்தியா என்ன கெடைக்கும்னு ஆயிப்போச்சு. அந்தக் காலத்துல கதர்ச்சட்டை போட்டவங்களைப் போலீசு மகன் தேடிட்டுப் போவான். அவனுடைய தாயார், தலை மறைவுக்காரங் களைத்தானே ஒளிச்சிவச்சுச் சாப்பாடு போடுவா. இப்ப நினைச்சிப்பார்க்க முடியுமா? அது வேற காலம்; இது வேற... அதைச் சொன்னாக் கூட இப்ப ஆருக்கும் புரியாது.’

நயினார் பிள்ளை சொல்வது உண்மைதான் என்று அவருக்குத் தோன்றுகிறது. அவருக்கு இரண்டு பெண்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/57&oldid=657567" இலிருந்து மீள்விக்கப்பட்டது