பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 55

தாம். படிக்கப்போட்டு ஒருத்தி டீச்சராக இருந்தாள். இரண்டு பேரையும் கட்டிக் கொடுத்து விட்டார். பெண் குழந்தைகள் தேவலை என்று தோன்றுகிறது.

நிமிடம்கூடப் பிடிக்கவில்லை. ஊர் வந்துவிட்டது. மாதா கோயிலின் முன் கொண்டுவந்து இறக்கிவிட்டான். வள்ளி பள்ளிக்கூடத்துக்கு வந்து கொண்டிருக்கிறாள். ஆண் பையன், படிப்பதைக் காட்டிலும் ஊர் திரிவதில்தான் குறிப்பாக இருக்கிறான். குமரனைக் காணோம். “ஏட்டி, குமரன் பள்ளிக்கூடம் வரல?”

“அவன் அம்மாளிடம் துட்டு வேணும்னு அழுது பெரண்டிட்டிருக்கா’ என்று செய்தி தெரிவிக்கிறாள். இன் றாடம் ஐந்து பைசா வைத்தாலே பள்ளிக்கூடம்போதுே: என்று அடம் பிடிக்கிறான். பள்ளிக்கூடம் செல்வதற்காக ஊக்கக் காசாக ஆச்சி கொடுத்துப் பழக்கி, அது இல்லாமல் போகமாட்டேன் ஒன்று விழுந்து புரளுகிறான்.

வீட்டு வாசலில் மனைவி குந்தியிருந்து ஈருருவிக் கொன் டிருக்கிறாள். அவரைக் கண்டதுமே எழுந்து ‘வேலுவைக் கூட்டிவரல...’ என்று கேட்டுக் கொண்டு உள்ளே இது தொடருகிறாள். அவர் பதில் ஏதம் கூறாமல் சட்டையை எடுத்து ஆணியில் மாட்டுகிறார். ஞானம் படுத்தபடியே எதற்கோ கோபித்துக் கொண்டிருக்கிறான்.

“பையனுக்கு...ஒண்ணில் லியே?’

‘கல்லுக்குண்டாட்டம் இருக்கா? அவனுக்கென்ன, கொளுப்புதா அதிகமாயிருக்கு. எனக்கு இவம் படிச்சி உருப்படுவான்னு தோணல.”

“நீரு ஏம் எறிஞ்சு விழுறிம்? போலீசுச் சவங்க எதுக்காக நாமபெத்த புள்ளயப் போட்டு அடிக்கணும்? அவனுவ கொட்டடில அடிபடவா நாமபெத்து விட்டிருக்கம்?”

“மூடு ஒ ஊத்தவாய போலீசுக்காரன் ஏன் சொல்லுற: திமிரெடுத்துப் போயி இவனுவ திரியிறானுவ படிக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/58&oldid=657570" இலிருந்து மீள்விக்கப்பட்டது