பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிப்பு மணிகள்

போனவன் படிப்பில் இல்ல கவனம் செலுத்தனும் குமுக்குப் பேர் வைக்கிறானாம்? மானக்கேடு...சரி, இப்ப என் கோவத்தை நீ கிளப்பாத. சடையன் வந்தானா? பொன் னாச்சி, எங்க? பச்சைய இளந்தண்ணி குத்திவைக்கச் சொன்னே, எங்கே, வாரப் போயிருக்கானா? தங்கபாண்டி வண்டி கொண்டாந்தாலும் வருவான்...”

‘அல்லாம் குத்திக்கெடக்கு. வண்டியும் மோட்டாரும் வந்து உம்ம உப்ப வாரிட்டுப். போப்போரா. ஏங்கெடந்து கனாக்காணுஹிம்!” என்று நொடித்துவிட்டு ஆச்சி உள்ளே செல்கிறாள்.

திடீரென்று நினைவுக்கு வந்தவராக அவர் கத்து கிறார். -

“அந்தக் குமரன் பயல ரெண்டு உதை கொடுத்துப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பக் கூடாது? இந்தப் பய ஏன். இன்னும் எந்திரிக்காம படுத்திருக்கிறான்? லே, எந்திரிந்து காலம பல்விளக்கி, சாமி கும்பிடணும்னு, உனக்கு எத்தினி தடவ சொல்லியிருக்கேன்? எந்திரிலே?”

அப்பா, பொன்னாச்சியும் பச்சையும் ஊருக்குப் போயிட்டாவ’ என்று ஞானம் ஆர்வத்துடன் எழுத்து அறிவிக்கிறான் பதிலுக்கு.

அவர் விழித்துப் பார்க்கிறார்.

பனன்னலே உளறுறே?”

நெசமாலும், அவிய வந்து அளச்சிட்டுப் போயிட்டா தூத்துடிக்கு அவருக்கு எதுவும் புரியவில்லை. “என்ன சொல்றா.இவ?”

சிதம்பர வடிவு அவரை நிமிர்ந்து பார்க்காமலே கனகில் எதையோ எடுத்துக் கொழிக்கிறாள். s

அவர் வந்து பின்புறமாக அவள் முடியைப் மற்று கிறார்.

சபிள்ளையளை எங்கே அனுப்பிச்ச...’ = “ஐயோ...முடிய வுடும்’ என்று அவன் கூந்தலைப் பற்றிக் கொண்கிறான். ‘போறம் போறம்னு சொல்லுற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/59&oldid=657571" இலிருந்து மீள்விக்கப்பட்டது