பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கரிப்பு மணிகள்

ஆனால் பாலம் கட்டும் யோசனை, திட்டம் எல்லாம் தயாராக்கிக் கொடுத்த பின் ஒடையின் பரதவர் வள்ளங்கள் நிறுத்துவதற்குத் தடங்லாகுமென்றும், அவர்கள் பாயை விரித்துக் கொண்டு பாலத்தடியில் செல்ல முடியாதென்றும் பாலம் கட்டக் கூடாதென்றும் மனுக் கொடுத்திருக்கிறார் களாம்.

அந்தச் செய்தியே கனவுப் பூங்காவில் வீழ்ந்த இடிபோல் தோன்றியது. இங்கு...பொன்னாச்சியையும் மகளையும் சின்னாத்தா கூட்டிப் போயிருக்கிறான்!

இத்தனை நாளாக இல்லாத கரிசனமா, வாஞ்சையா? எது?

அளத்தில் உப்பு கண்ணாடி மணிகளாக, பரல்களாக இறங்கியிருக்கிறது. ஆயிரமாயிரமான ஏக்கர் நிலங்களில் ஆட்களை விரட்டி செய்நேர்த்தி செய்தவர்களுக்குக்கூட இவ்வளவு நேர்த்தியாக உப்பு இறங்கியிருக்காது. மூட்டை ஐந்து ரூபாய்க்குத் தாராளமாகப் போகும். இது...இதை தங்க பாண்டி, வண்டியை ஓடையில் இறக்கிக் கொண்டு வந்து அலட்சியமாக அள்ளிப் போட்டுக் கொண்டு போவான். அவருக்கு எப்போதும் முடை. அவன் கொடுத்த பணத்தை வாங்கிக் கொள்வது கட்டாயமாகி விடுகிறது. அவனிடம் உப்பு கண்டு முதலாகு மூன்பே கடன் வாங்கி விடுகிறார். இப்போது அவன் வந்தால், உப்பை வாரிவிடலாம். பணம் இருபது ரூபாய் வாங்கிக் கொள்ளலாம்... -

சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு’ அங்கு பன ஒலை யினால் வேயப்பெற்றிருக்கும் சிறு அறைக் கதவைத் திறந்து வாருபலகை, வாளி ஆகியவற்றை எடுக்கிறார். பாத்தியின் கீழிறங்கி, சலசலவென்று கலகலத்துச் சிரிக்கும் மணிகளை வார் பலகையில் கூட்டி ஒதுக்குகிறார். -

தொலைவில் தங்கபாண்டியின் வண்டிச் சத்தம் சட கட வென்று கேட்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/63&oldid=657581" இலிருந்து மீள்விக்கப்பட்டது