பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 5

‘யில்லை. அது பங்களா போலவே இருக்கிறது. கீழே நடக்கக் கூகம் பளிங்குத் தரையில் அடிவைக்கவே மெத்தென்ற விரிப்பு. பூப்போட்ட திரைகள்; மெத்தென்ற உட்காரும் ஆசனங்கள்” அவள் தயங்கியவளாக வெளிவராந்தாலில் நிற்கிறாள்.

‘ஏட்டி, நிக்கிற? இங்ஙன உள்ள வா! சாமானங் கெடக்கு. தேச்சுக்கழுவு, இங்க பெருக்கி, பதவிசாத் துடச்சி வையி முதலாளி வராக...” என்று சொல்லிவிட்டு கட்டி டத்தைச் சுற்றி உள்ளே அழைத்துச் செல்கிறான். பின் தாழ்வாரத்தில் குழாயடியில் வெள்ளி போன்ற சாப்பாட்டு அடுக்கு கூசா, தம்ளர்கள், தட்டு ஆகியவை கிடக்கின்றன. சோப்புத் துளை எடுத்துப் போடுகிறான். அவள் துலக்க அமருகிறாள்.

நெஞ்சில் சருக்கருக்கென்று, மணலில் கத்தி தீட்டுவது போன்றதோர் அச்சம் குலைக்கிறது. இது வெறும் பாத்திரம் துலக்க அல்ல. “முருவா...முருவா’ என்று உள்ளம் ஒலமிடு கிறது.

சாமான் துலக்கும்போது, அங்கிருந்து ஓடிவிடப் பின் கதவு திறந்திருக்கிறதா என்று பார்க்கிறாள். பின் கதவு கம்பி வலைகளால் பாதுகாக்கப் பெற்றிருக்கிறது. ஆனால், பூட்டப் படாமல் திறந்து தானிருக்கிறது. அவள் வெகுவிரைவில் பாத்திரங்களைத் துலக்கிக் கழுவிக் கவிழ்த்து வைக்கிறாள். அச்சத்தில் நர உலர்ந்து போனாலும், குழாயில் கொட்டுவது நல்ல நீர் தானா என்று பார்க்கக்கூடத் தெம்பு இல்லை. அந்தத் தாழ்வரையின் ஒர் ஒரத்தில் வேண்டாத சாமான்கள் போடும் ஒர் அறை இருக்கிறது. பெயின்ட் தகரங்கள், சொத்து வேலைக்கான தட்டுமுட்டுக்கள், நார்ப் பெட்டிகள், உடைந்து போனதோர் நாற்காலி ஆகியவை இடம் கொண்ட அந்த அறையில் அவன் ஏதோ பார்ப்பவனாகப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். இங்க வாட்டி, வாரியல் இருக்கு பாரு. சுத்தமா இந்த ரூம்பைத் தட்டிப் பெருக்கு'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/68&oldid=657592" இலிருந்து மீள்விக்கப்பட்டது