பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கரிப்பு மணிகள்

அவள் பருந்தைக் கண்ட கோழிக்குஞ்சாகப் பதுங்கி, தோளைப் போர்த்துக் கொண்டு உள்ளே செல்கிறாள்.

வாரியல் அவிழ்ந்து கொட்டிக்கிடக்கிறது. அவள் அதைத் திரட்டிக் கட்டும்போது அவன் அவள்மீது விழுத்து மாராப்புச் சேலையைத் தள்ளி விடுகிறான்.

அவள் பலம் கொண்ட மட்டும் அவன் கையைக் விள்ளித்

தள்ளுகிறாள், “என்னியவிடு...! என்னிய விடுரா. சனத்து மாடா? சவம்...” -

காலை நீட்டி அவனை உதைக்கப் பார்க்கிறாள். வெளியே யாரோ நடமாடும் அரவம் கேட்கிறது.

அவனுக்கு ஆத்திரம். அவளைச் சுவரில் வைத்து ம்ோது கிறான். -

‘ஒன்ன வழிக்குக் கொண்டார எனக்குத் தெரியும் டி. ?” என்ற மாதிரியில் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீசையைத் திருகிக் கொள்கிறான். அதைப் போன்றதோர் அருவருப்பான எதையும் அதற்குமுன் அவள்மனம் உணர்ந்: திருக்கவில்லை. அவ்ஸ் விர்ரென்று திறந்த ஒற்றைக் கதவின் வழியாகக் குழாயடியில் வந்து நிற்கிறாள்.

‘மூளி...ஒனக்கு அம்புட்டிருக்கா? செறுக்கி, மவ. ஒந்திமிரு பதங்கொலைய நீயே வந்து விழுவ. பத்தினித் தனமா காட்டுறே?...”

வெளியே கார் வந்து நின்றிருக்கிறது. முதலாளிமார். யாரோ வந்திருக்க வேண்டும். அவன் நாய் வாலைகுழைத்துக் கொண்டு ஓடுவதைப்போல் ஒடுகிறான். பொன்னாச்சி பின் கதவைத் திறந்துகொண்டு ஒட்டமாக் ஓடி வருகிறாள். தான் ஒரு கசத்தில் வந்து, மாட்டிக் கொண்டது புரிகிறது.

அவள் தப்பிவிடலாம். இந்த அளத்துச் சோலிக்கு முழுக்குப் போட்டுவிட்டு நின்றுவிடலாம். ஆனால், அட்

வான்ஸ் இருபத்தைந்து ரூபாயை எப்படித் திருப்பிக் கொடுப் nfessir?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/69&oldid=657594" இலிருந்து மீள்விக்கப்பட்டது