பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 67

கண்களில் நீர் கரிப்பாய் சுரந்து கரகரவென்று கன்னங்: களில் இறங்குகிறது. * ஐட்ராவை மூங்கிற்குழாய் நீரில் விட்டு டிகிரி பார்த்துவிட்டு அதை மீண்டும் போணி'க்குள் போட்டுக் கொண்டு நிமிர்ந்த ராமசாமி, இவள் கண்ணிர் வடிய தன்னந்தனியாக ஓடுவதைப் பார்க்கிறான்.

‘ஏவுள்ள... ஏ அளுதிட்டுப் போற?... ஏ...?”

அவனுடைய வினா அப்போது மனதை இதமாக வந்து தொடுகிறது என்றாலும் அவன் யாரோ! அவனும் ஒரு கங்காணியாக இருப்பானாக இருக்கும்? அவனைச் சற்றே நிமிர்ந்து. பார்த்தாலும் மறுமொழி கூறவில்லை. -

எண்பத்தேழாம் நம்பர் பாத்தி வரப்பில் நின்று மாசாணம் கறுப்புக் கண்ணாடி மாட்டிக் கொண்டு சேர்ந்த உப்புை வாளியினால் வாரிப் பெட்டிகளில் நிரப்புகிறான். அடுத்த பாத்தி ஒன்றில் பேரியாச்சி நீண்ட பிடியுள்ள கொத்துப்பலகையில் நீரில் பாளமாகக் கட்டியிருக்கும் உப்பைச் சலங்கைகளாக உடைக்கிறாள். மாசாணம் அவள் மகன்தான். கல்யாணம் கட்டி, மருமகளும் வேலை செய்கி றாளாம். ஆனால், இந்த அளமில்லை. அவர்கள் குடியிருக் கும் செவந்தியாபுரம் அளத்திலேயே பணி செய்கிறாளாம்.

முகத்தைத் துடைத்துக்கொண்டு பெட்டியில்லாமல் வந்து நிற்கும் அவளை மற்ற பெண்கள் பார்க்கின்றனர். அவளைக் குரோதப் பார்வை கொண்டு நோக்கும் வடி வாம்பா ‘குடுத்து வச்சவிய நிக்கிறாவ. ஏட்டி எங்கட்டி பாத்து வாயப்பொளக்குறே? ஒ மாப்பிளயா அவுத்திட்டுக் கெடக்கா?” என்று இன்னொருத்தியைக் கடிவது போல் ஏசுகிறாள். இங்கே பெண்களும்கூட எவ்வளவு கேவல

  • ஐட்ரா-ஹைட்ரா மீட்டர் எனப்படும், நீரின் அடர்த்தியைச் சோதித்தறியும் சருவி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/70&oldid=657598" இலிருந்து மீள்விக்கப்பட்டது