பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - கரிப்பு மணிகள்

மாக ஏசுகிறார்கள். மாமி ஏசுவாள்; அல் அயல் சண்டை போட்டுப் பார்க்காதவளல்ல அவள். ஆனால் இந்தப் பாத்திக்காட்டில், உப்புக் கசத்தில் புழுத்த நாயும் குறுக்கே செல்லாத வசைகன்! -

நரநரவென்று உப்பு கால் சதைகளின் மென்மையை வருடி இது வேறோர் வாழ்வு என்று அறிவுறுத்துகிறது பசுமையற்ற அந்த உப்பு வெளியிலே, மென்மையின் உயிர்த் துடிப்புக்களுக்கு இடமே கிடையாது. ஏரிபோல் விரிந்திருக் கும் தெப்பங்களில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் கபடமான கொக்குகளைத் தவிர ஒரு புழு பூச்சி கிடையாது. இங்கே வந்து தங்கினாலும் இந்த உப்பு அவற்றைத் தன் மயமாக்கி விடும். f +

பொன்னாச்சி பெட்டியை எடுத்து வந்து உப்புச் சுமக் கிறாள். -

கட்டெரிக்கும் கதிரவன் உச்சிக்கு ஏறி, பாத்திகளின் நீரை உறிஞ்சுகிறான். அந்த நீர் உனக்கு மட்டும் உரிமை யில்லை என்றுரைத்துக் கொண்டு வறண்ட காற்று, குருதியை உழைப்பாக்கும் நெஞ்சங்களையும் உலரச் செய்கிறது. பெட்டி உப்பு-நடை-சுமை-தட்டுமேடு- அம்பாரம். இவற்றுக்கு மேல் சிந்தையின்றி, மனிதத்துளிகள் இயந்திரமாகி விடும் இயக்கம். இங்கு சிரிப்பும் களிப்பும் தோய்ந்த பேச்சு உயிர்க்காது. -

பொன்னாச்சிக்குக் குடம் குடமாகத் தண்ணிர் குடிக்க வேண்டும் என்று விடாய் விசுரூபம் எடுக்கிறது. விருந்து கொட்டாயில் கொட்டிய குழாயை நினைத்துக் கொள் கிறாள். பகலுணவுக்கு மணியடிப்பார்கள்.

சோற்றுக் கொட்டுக்குப்போய் நீரருந்தலாம்? அங்கும் குழாயுண்டு. ஆனால் அந்த மாசாணம் அதைக் குத்தகை எடுத்திருக்கிறான். இலகுவில் விடமாட்டான். உணவு நேரத்தை விட்டால் நீரருந்த முடியாது.

‘கண்ட்ராக்டு நாச்சியப்பன் குடைபிடித்துக் கொண்டு தட்டு மேட்டில் வந்து நிற்கிறான், பொன்னாச்சி அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/71&oldid=657599" இலிருந்து மீள்விக்கப்பட்டது