பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 69

திற்கும் பக்கம் உப்பைக் கொட்ட அஞ்சி அம்பாரத்தின் இன்னோர் பக்கம் கொட்டி விட்டுத் திரும்புகிறாள். அம்பாரம் குவிக்கும் ஆண்டியை, செருப்பின் அடியில் உப்பு நெரிய நின்று அவன் விரட்டுகிறான்.

நாச்சப்பன் பின்னர் அவளைச் சீண்டவே குடையும் கையுமாக வரப்பில் இறங்கி வருகிறான். இரு கைகளையும் தாக்கி உப்புப் பெட்டியை அவள் சுமந்து வருகையில் அவன் எதிர்ப்பட்டு, வேலையை விரைவாக்க முடுக்கும் பாவணை யில் கைவிரலை அவள் விளாவில் நுழைத்து சீண்டி விட்டுப் போகிறான். அந்த உப்பை அவன்மீது கொட்டி அவனை மிதிக்கவேண்டும் என்ற ஒர் ஆத்திரம் பற்றி எரிகிறது பொன்னாச்சிக்கு.

ஆனால், ஏலாமை கண்களில் நீரைப் பெருக்கி, பாத்தி காடுகளும் உப்புக் குவையும் வெறும் வெண்மைப் பாயல் களாகக் கரையப் பார்வையை மறைக்கிறது.

சிறுவயசில் அவள் தாயுடன் குளத்துக்குக் குளிக்கச் செல் வாள். அந்நாட்களில் குளத்தில் நடுவில் மலர்ந்திருக்கும் அல்விப்பூக்களைப் பறிக்க வேண்டும் என்று மிகவும் ஆசை பாக இருக்கும். ஆனால் அம்மா அவளைக் கீழே இறங்க விட மாட்டாள். கணுக்கால் நீருள்ள படியிலேயே அமர்த்திக் குளிப்பாட்டித் துடைத்துக் கரைக்கு அனுப்பி விடுவாள். “இன்னும் இன்னும்...’ என்று ஆழத்தில் இறங்க வேண்டும் என்று அவள் கத்துவாள்.

“ஆளண்டி, அறிவுகெட்டவளே, போனா ஒளையிலே மாட்டிக்கிட்டு முடிஞ்சி போவl’ என்பாள்.

ஆனால் அவளுக்கு அப்போது அது உறைத்ததில்லை. அந்நான் மற்றவர் நீந்திச் சென்று மலர் பறித்து வருவது அவளுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். பின்னர், அவள் தாப் இறந்துபோன பிறகு ஒருநாள், அவள் பூப்பறிப்பதற்காக இருகைகளையும் நீரின்மேல் அகலப் பாய்ச்சிக் கொண்டு

ஆழத்தில் இறங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/72&oldid=657601" இலிருந்து மீள்விக்கப்பட்டது