பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கரிப்பு மணிகள்

வைத்துக் கொண்டு டிகிரி பார்க்கும் அந்த இளைஞன், அவளை ஏன் அழுகிறாய்’ என்று கேட்டவன், கை, கால். கழுவி கொண்டிருக்கிறான்.

“ஆகா...சோறு மணக்கு...எனக்குஞ் சோறு வையிடீ. ராசாத்தி...” என்று ஒருவன் வந்து குந்துகிறான். இடையில் அவனிடமிருந்துதான் புளித்த கள்ளின் நெடி வருகிறது. கறுத்த நனைந்த சல்லடத்தைத் தவிர அவனது கறுத்த மேனியில் துணியில்லை. திரண்ட தோள்கள்; எண்ணெயும் நீரும் கோத்த முடி; சிவந்த கண்கள்.

“அக்கா, நாஞ் சொன்னேனில்ல, இ.வெதா...அந்த டைவரு.’ -, s

அவன் நெருக்கிக் கொண்டு அவள் சோற்றுக்கையைப் பற்றும்போது அவள் தாக்குப் பாத்திரத்துடன் எழுந்து திமிரப் பார்க்கிறாள்.

அப்போது கால் கழுவிக் கொண்டிருக்கும் அந்த “ஐட்ரா” இளைஞன் பாய்ந்து வந்து அவனை இழுத்து ஒரி உதை விடுகிறான்.

ராஸ்கோர்ல்...பொண்டுவ கிட்ட வம்பு பன்னு. ஒன்ன எலும்ப நொறுக்கிப் போடுவ...’

அவன் வாய் குழற அழுகுரலில் கத்துகிறான். :குடிகாரப் பய...” “நீ சோறுண்ணும்மா...இனி அவெ வரமாட்டா இத்தப் பக்கம்...” H

பொன்னாச்சி விழிகள் பூச்சொரிய அவனைப் பார்த்த வண்ணம் நிற்கிறாள்.

அந்தக் கண்ட்ராக்டர் காலமாடனுக்கும் இப்படி ஒரு பூசை போடுவாரோ இவர்?... -

பகமையற்ற கரிப்பு வெளியில் ஒர் நன்னிருbறின் குளிர்மை இழையோடி வந்து படிவதாகத் தெம்பு கொள்கிறாள். அவள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/75&oldid=657608" இலிருந்து மீள்விக்கப்பட்டது