பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அந்த ஆண்டுக்கான முதலுப்பை வாரி எப்போதோ அம்பாரம் குவித்து விட்டார்கள். ஆனால் கங்காணி தொழிலாளர் கூலிக்கு முதலுப்பு வாரும் பூசை இன்னமும் போடவில்லை. ஆயிரமாயிரமாகப் பரந்து கிடக்கும் ஏக்கர் பாத்திகள் எல்லாவற்றிலும் செய்நேர்த்தி முடிய வில்லை என்று கணக்குப்பிள்ளை பூசை என்ற ஆயத்தை இன்னும் நிகழ்த்தவில்லை. நான்கு மூலைகள் கொண்ட சிறு சதரமேடு, போல் கட்டப் பெற்றிருக்கும் பூடத்துக்கு வெள்ளையடித்து அழகு செய்வது கண்டு பேரியாச்சி, “பூடத்துக்குப் பூசை போடுறாக போல இருக்கு...’ என்று ஆறுதல் கொள்கிறாள்.

அவர்களுக்கெல்லாம் இனி முழுக்கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.

பொன்னாச்சிக்கு அதைப் பற்றிய ஆர்னமும் ஆவலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் அவளும், பச்சையும் கண்ட்ராக்ட் கூலிகள். அவர்களுக்கு நாச்சி யப்பன் மனமுவந்து கொடுப்பதுதான் கூலி. பொது நிர் ணயக் கூலி முறையில் அவர்கள் அளத்தில் பணியெடுக்க வில்லை. * - -

பூடத்தின் முன் வாழையிலை விரித்து, உப்பை அள்ளி வைத்து, கற்பூரம் காட்டிக் கும்பிடுகிறான் பிச்சைக்கணி. அந்த முதலுப்பு, முதலாளிகள் வீட்டுக்குப் போகும் உப்பு விளைச்சலைப் பற்றியோ, இலாப நட்டங்களைப் பற்றியோ நினைக்க அவர்களுக்கு உரிமையுமில்லை ஒன்றுமில்லை;

காலையில் எங்கோ ஆலைச்சங்கு ஒலிப்பதைக் கணக்கு வைத்துக்கொண்டு எழுந்து, சின்னம்மாவும், அவளும் தம்பியும், அலுமினியம் தூக்குப் பாத்திரங்க்ளில் பழைய

* =
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/76&oldid=657609" இலிருந்து மீள்விக்கப்பட்டது