பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கரிப்பு மணிகள்

சோற்றையோ, களியையோ எடுத்து வைத்துக் கொண்டு அதையே கொஞ்சம் கூழாகக் கரைத்துக் காலை நேரத்துக்கு அருந்திவிட்டு, பாத்திக் காட்டில் நடப்பதற் கான பன ஒலை மிதியடிகளைக் கோத்து வாங்கிக் கொண்டே நடப்பார்கள். அந்த மிதியடிகளை ஒரு நாளைக்கு ஒரு சோடி போதாமல் பகலுடன் கிழிந்து விடுகின்றன. நறநறவென்று தெரியும் உப்புக்கு ரப்பர் செருப்பு. ஈடு கொடுக்காது. வெட்டவெளியில் பெண்களான அவர்களுக்கு இயற்கைக் கடன் கழிக்க ஓர் மறைவிட வசதிகூடக் கிடை யாது. சூலியான அன்னக்கிளி தவித்துப் போகிறாள் எங்கோ கடற்புரத்தை நாடி அவர்கள் நாலைந்து பேராக நடக்கின்றனர்.

ஆச்சி, அடிவயிறு கல்லா நோவு...’ என்று கிழவியான பேரியாச்சியிடம் அன்னக்கிளி கரைகிறாள். அவள் கண்கள் குழியில் எங்கோ கிடக்கின்றன. கன்னத்தெலும்புகள் முட்டியிருக்கின்றன். நான்கு குழந்தைகள் பெற்றிருக்கி றாள். இது ஐந்தாவது பிள்ளைப்பேறு. புருசன் ஐந்தாறு மாசங்களுக்கு முன் இவளை விட்டு ஓடிப்போய் விட்டானாம். அவளைப் பற்றி ஒரு மாதிரி யானவளென்று அழகம்மா, பொன்னாச்சியிடம் கிசுகிசுக்கிறாள்.

சஏட்டி. நீர்க்கோவயின்னா, பெருஞ்சீரவம் வெந்தியம் ரெண்டயும் வெடிக்கவுட்டுக் கிழாயம் வச்சிக் கருப்பட்டியப் போட்டுக் குடிக்கிறதில்ல? நாலு புள்ள பெத்தவதானே?” என்று பேரியாச்சி இரைந்து பேசுகிறாள்.

பொன்னாச்சிக்கும் கூடச் சில நாட்களில் இட்டுப் போகிறது கண்களிலிருந்து தாரையாக நீர் வழிந்து பார் வைய்ை மறைக்கிறது. அதைத் துடைக்கக்கூட முடியாமல் இயந்திரம் போல் வரப்புக்கும் தட்டு மேட்டுக்குமாக உப்புப் பெட்டி சுமக்கிறாள். H

அப்பனைக் காணும்போது அவளுக்கு இப்போதெல்லாம் கசிவு தோன்றுவதேயில்லை, அவர் அவள் புறப்படும் போதெல்லாம் படுத்திருக்கிறார். மாலை நேரங்கனில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/77&oldid=657611" இலிருந்து மீள்விக்கப்பட்டது