பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கரிப்பு மணிகள்

கனவுகள் கண்டவளாக இருந்திருப்பாளோ? வயிற்றுப் பசி யுடன் போட்டி போட இயலாத கனவுகள் அவளையும் வருந்தி குலைத்திருக்கும். அவளை ஒர் ஏலாத குடும்பக்காரன் கலியாணம் என்று வளைத்துக்கொண்டிருக்கிறான்.

பிறகு.பிறகு...இந்த அப்பன்... இவருக்கா அவள் இரக்கப்பட்டாள்?

சின்னம்மா இப்போது எதற்கு விம்மி அழுகிறாள்? தன்னுடைய சுகந்த மனங்களெல்லாம் சேற்றுக் குட்டை யிலும் தெருப்புழுதியிலும் சிந்திவிட்டதென்று அழு கிறாளோ?

பொன்னாச்சிக்கு நெஞ்சு கட்டிப் போகிறது. சோது இறங்கவில்லை. வேலியும் காவலும் இல்லாமல், உயிர்ப்பும் மென்மையும் வறண்டு போகும் உப்புக் காட்டில் , தன்னைப் போல் நலம் குலைய நிற்கும் ஒவ்வொரு பெண்ணையுமே நினைத்துச் சின்னாச்சி அழுவதாகத் தோன்றுகிறது.

அன்றிரவு பொன்னாச்சிக்கு உறக்கம் பிடிக்கவில்லை. மாமன் வரமாட்டாரா, திரும்பிப் போய்விட அழைக்க மாட்டாரா என்று கூட நினைத்தாளே. அந்த நினைப்பு உகந்ததாக இல்லை. இங்கே இந்தக் களத்தில், கங்காணி களும் கணக்கப்பிள்ளைகளும், கண்ட்ராக்ட்களும் நச்சரவு களாய் ஊரும் களத்தில், காவலில்லாத பூச்சிகளாய் அவர்கள் இருக்கிறார்களே. அது தொடர்ந்து கொண்டே இருக்குமா?... இதைத் தட்டிக் கேட்க ஆளில்லாமலே இருந்து விடலாமா?

தட்டிக் கேட்க என்று தோன்றுகையில் ராமசாமி அந்த ஐட்ரா ஆள், முதலாளிக்கு வேண்டிய ஆள் என்று தம்பி சொன்ன அந்த..அவர் முகம் நினைவுக்கு வ்ருகிறது. அதிக உயரமுமில்லை; பருமனுமில்லை. வெள்ளைச் சட்டையும் வெளுத்த முண்டாகம் அரும்பு மீசையும் குளிர்ந்த விழிகளு மாக அந்த ஆள்...'தண்ணிர் குடிச்சிட்டீங்களா?” என்று கேட்கும் ஆள்... அவளுடைய சங்கடங்களைப் புரிந்துகொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/83&oldid=657624" இலிருந்து மீள்விக்கப்பட்டது