பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 85

நானே பெட்டியில எடுத்துப்போடுறேன் அக்கா...” என்று பொன்னாச்சி அவள் வேலையை இலகுவாக்க முற். படுகிறாள். ---

அன்னக்கிளி தலையில் பெட்டியைச் சுமந்து கொண்டு ஒரு நடை கொண்டு போய் கொட்டுமுன் பொன்னாச்சி இரண்டு முறைகள் பெட்டியை நிரப்பிக் காலி செய்து விடுகிறாள்.

வெயில் உச்சிக்கு ஏறிக் காய்கிறது. அன்னக்கிளிக்கு மூச்சு வாங்குகிறது. நஞ்சோடையின் அருகே கூடையுடன் கீழே உட்கார்ந்து விடுகிறாள். -

“ஏனக்கா?...உடம்புக்கு என்னேனுமா?...” ‘இல்லே..எனக்கு தாவமாயிருக்கு. தண்ணி...தண்ணி வேணும்..” என்று மூச்சிரைக்க அவள் சாடை காட்டு கிறாள். பொன்னாச்சிக்கு அவளைக் காணவே நடுக்கமாக இருக்கிறது. --

தனது பெட்டியை வைத்துவிட்டுத் தொலைவில் இருக் கும் கொட்டடிக்கு ஒடுகிறாள். கொட்டடியில் இப்போது குழாயில் தண்ணிர் விடுவார்களா? அவள் ஓடி வரு வதை நாச்சப்பன் பார்த்து விடுகிறான்.

செறுக்கிவுள்ள. ஏண்டி ஒடியார? வேலயப்போட் டுட்டு...” என்று நாக்க்கம் சொற்களால் வசைபாடு கிறான்.

“தண்ணி வேணும்...தாவத்துக்குத் தண்ணி. அன்னக்கிளி அக்கா தண்ணி கேக்கா.”

‘அதுக்கு, அவ என்ன ராணிமவ ராணியா? ஒன்ன அனுப்பிச்சி வய்க்கா?... கண்ட களுதங்களுக்கும் படுக்க விரிச் சிட்டு வயித்தச் சாச்சிட்டுவாரா! ஒருநாக்கூட ஒளுங்கா வேல செய்றதில்ல!. -

வசைகள் உதிருகின்றன. ஆனால் ஐட்ரா ராமசாமி அங்கு சுறுப்புக் கண்ணாடி மாட்டிக் கொண்டு உப்பு வாரு கிறான். அவன் அவள் நீர் வேண்டி வந்தறிந்து வாரு பலகையைப் போட்டுவிட்டு எங்கிருந்தோ தண்ணிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/88&oldid=657633" இலிருந்து மீள்விக்கப்பட்டது