பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கரிப்பு மணிகள்

கொண்டு வருகிறான்.

“ஆருக்குத் தண்ணி வேணும் ?” குடுங்க. பிள்ளத்தாச்சி...அன்னக்கிளியக்கா, மயக்கமா

உக்காந்திட்டா...”

வாளியும் குவளையுமாக அவனும் அவளுடன் செல்கிறான்.

அன்னக்கிளி கவிழ்ந்தாற்போல் உட்கார்ந்த படியே முதுகு சரியக் கிடக்கிறாள். முட்டியை ஊன்றினாற்போல் மடித்துக்கொண்டு குப்புற வீழ்ந்து கிடக்கிறாள்.

‘முருகா...முருகா...!” என்று அவள் மனசுக்குள் கூவிக் கொள்கிறாள். s

கீழே அமர்ந்து அவள் முகத்தை மெல்லத் துக்கி, :இத தண்ணி, அன்னக்கிளியக்கா?... தண்ணி கேட்டியே? என்ற அவள் தலையைத் துாக்குகிறாள். முகத்தில் வியர்வை பெருகுகிறது. கைகள் இரண்டையும் வயிற்றில் கோத்தாற்போல் வைத்துக் கொண்டிருக்கிறாள். சற்றே நகருகையில், கீழே உப்பு மிதிலாடும். மண்ணில் அவளது நிணநீர். கறுப்புச் சிலைத் துண்டை நனைத்துக் கொண்டு...

அவளுக்கு நெஞ்சு ஒட்டிக் கொள்கிறது. பேரியாச்சி இருக்குமிடம் தேடி ஓடிப்போகிறாள். :ஆச்சி.. ஆச்சி? அங்க வந்து பாரும்...அன்னக்கிளி அக்கா...உதரமாச் சரியிது...” h

கிழவி கொத்து பலகையைப் போட்டுவிட்டு விறைகி றாள். இன்னும் வேறு சில பெண்களும் ஆண்களும் திரும்பிப் பார்த்து வருகின்றனர்.

இவளுவ வெக்கங்கெட்ட வேசிக. வகுத்துப்புள்ள கிளவுளற வரயிலும் ஏன் சோலிக்கு வரணம்?”

மாசமாவலன்னான்னாலும் மானக்கேடில்ல? ஆட்ட கெடந்தா என்ன?”

நாலு புள்ளிய, இவ என்னேய்வா? இருந்தாலும் தயிரியம், ஆளத்துல வந்து வுளுந்து கெடக்கலாமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/89&oldid=657635" இலிருந்து மீள்விக்கப்பட்டது