பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 87

ராமசாமி சற்று எரிச்சலுடன், ‘ஏன் தலைக்கித்தலை பேகறிய? பலவை எதானும் கொண்டிட்டு வந்து கொட்ட டிக்குத் துக்கிட்டுப் போகலாம் வாங்க!’ என்று அங்கு வேடிக்கை பார்க்க நிற்கும் வார்முதல் கங்காணி செல்வ

ராசை அழைக்கிறான். -

ஏலே, நீ புள்ளப் பேறு பார்க்க வாரே போலே! பொண்டுவ இளுத் தெரிவாளுவ. இந்தச் சிறுக்கியளுக்கு நெஞ்சுத்தகிரியம். மொதலாளி காருல ஆகபத்திரிக்கிக் கூட்டிப் போவார்னு கூட வழுவாளுவ

ராமசாமி அந்த செல்வராசை ஒரு மோது மோதித் தள்ளுகிறான்.

“ஒரு ஆத்தா வயித்துல பெறக்கல நீ? அக்கா தங்கச்சி தெரியாது ஒனக்கு உகருக்கு அவ மன்னாடுதா...இவெ பேசுதா!’ -

அவன் சந்தனசாமியைக் கூட்டிச் சென்று அலுவலகக் கொட்டடியில் கிடக்கும் ஒரு பெஞ்சியை எடுத்து வருகிறான். தலையில் சுற்றிய துண்டை எடுத்துப் போடுகிறான். இன்னும் அதைப் பின்பற்றிப் பல தலை துணிகள் விழு ‘கின்றன. =

கொட்டிடியில் பேரியாச்சியும் அழகுவும் வடிவாம்பா -வும் அவளைச் சுற்றி இருக்கின்றனர்.

நாச்சப்பன் எல்லா வசைகளையும் பொல பொலத்துத்

நீர்த்துவிட்டான். அன்று திட்டப்படி வேலை நடக்க வில்லை. -

பகலுணவுக்கு அவர்கள் திரும்பும் நேரத்தில் கொட்டடி யிலிருந்து பச்சைச் சிசுவின் குரல் கேட்கிறது. அந்தக் கரிப்பு வெளியில் உயிர்த்துவத்தை எதிரொலித்துக் கொண்டு அதன் முதல் அழுகையின் ஒலி கேட்கிறது. ‘பொட்டவுள்ள!’ என்று அழகுதான் முதலில் அறிவிக்கிறாள். பொன்னாச்சி கொட்டகை ஒரத்தில் எட்டித்தான் நின்று அதைக் கேட்கிறாள்.

‘பொட்டவுள்ள...பொட்டவுள்ள...'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/90&oldid=657639" இலிருந்து மீள்விக்கப்பட்டது