பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் , - 89

செல்வராசு இப்போது ஆத்திரத்துடன் பொன்னாச்சியின் செவிகளில் விழும்படி, “...இவனுக்கு அந்தப் பொம்பிள வாய்ப்பு...’ என்று கூறித் தனது அவமானத்துக்கு ஆறுதல் தேடிக் கொள்கிறான். அன்று நாச்சப்பன் அத்தனை மாங்கை"யும் வழித்துப் போட்ட பின்னரே அவர்கள் வேலை முடிந்து போகலாம் என்று கட்டளை இடுகிறான். அவர்கள் வேலை முடிக்கும்போது மணி ஏழாகி விடுகிறது. -

தம்பி, பாவம் அவனுக்குப் பசி எடுக்கும்; தூக்கம் வந்து விடும். -

அவன் அக்காளுக்காகக் காத்திருக்கையில் ராமசாமி அவனிடம், -

  • நீங்க எங்கேந்து வாரிய?’ என்று விசாரிக்கிறான்.

‘துரத்துடி.ஆரோக்கியமாதா கோயில்ல அதுக்கும் பின்னால போவணும்...’

‘ஒங்ககூட ஆரும வாரதில்ல?”

  • இல்ல.”

“அப்பச்சி, அம்மா இருக்காவ?” “அப்பச்சிக்குக் கண் தெரியாது. அம்மா செத்தும் போச்சு. சின்னாச்சி அளந்து சோலி பாக்குது...’ என்று பச்சை விவரங்கள் தெரிவிக்கிறான். -

பொன்னாச்சி வந்த பிறகு அவனும் அவர்களுடன் பாலம் வரையிலும் சைக்கிளுடன் நடந்து வருகிறான். செவந்தியா புரத்தில்தான் இருப்பதாகவும், தெரிக்காட்டைத் தாண்டும். வரையிலும் உடன் வருவதாகவும் கூறி வருகிறான். அங்கு ஒரு கடையில் அவர்களுக்குத் தேநீர் வாங்கித் தருகிறான். பொன்னாச்சிக்கு முதலில் தயக்கமாக இருக்கிறது. யாரும் எதுவும் பேசுவார்களோ என்று அஞ்சுகிறாள். அவளையும் இணைத்துச் செல்வராக பேசிய சொற்கள் மென்சதையில் உப்பாய் வருடுகின்றன. s

‘வாங்கிக்கம்மா, ஏ, பயமாயிருக்கா? தம்பி, நீ சொல்லு, ஒன் அக்காளுக்கு! நா ஒண்னுஞ் செஞ்சிர மாட்டே.”

-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/92&oldid=657642" இலிருந்து மீள்விக்கப்பட்டது