பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கரிப்பு மணிகள்

சொம்மா கெடந்து சலம்பாதிம், மொதலாளி தொழி: லாளிண்டு. அவிய மொதலாளியா. இருந்து இத்தினி பேருக்கும் கூலி கொடுத்துத்தா காக்கஞ்சிக்கின்னாலும் அடுப்பு புகையிது. ஒங்களுக்குள்ள ஒத்துமயில்லாதப்ப அதப் பேசி என்ன பிரேசனம்? சங்கக்கார அத்தினி பேரும் அளத்துல பாடுபட்டு ஒத்துமையா நிக்கிறியளா? மூடமுக்கா ரூவாயிண்டு இங்க வாங்கி இவனுவளே ம்த்தவனுக்கு விக்க துரோகம் செய்யிறா’ என்று மடக்கி விடுவாள். அவரால் மறுபேச்சுப் பேசமுடியாது.

மருதாம்பா கருப்பட்டிக் காப்பியை இறுத்து, “வட்டக் கொப்பில் ஊற்றி மாமனுக்குக் கொண்டு வந்து வைக்கிறாள். அந்தப் பளபளக்கும் வட்டக் கொப்பி வகையறா பெரியாச்சி யிடமிருந்து பாஞ்சாலி கேட்டு வாங்கி வந்ததென்று பிறகு தான் பொன்னாச்சி புரிந்து கொள்கிறாள். உறைக்கிணற்றி லிருந்து நீர் கொண்டு வந்து மேல் கழுவிக் கொண்டு மசாலை அரைத்துக் கொடுக்கிறாள் பொன்னாச்சி.

மாமா இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறார். காபி குடித்தாகிவிட்டது.

“அளத்துல ஒருத்தி பிள்ள பெறு:றவரய்க்கும் ஏன் வேல செய்யிதா? கொஞ்சம் மனுசாபிமானத்தோட பேறு காலத்துக்கு அலவன்சு மாதிரி ஏதாவது கொடுக்கிறா வளா? இவங்களுக்கு அதனாலே கொறஞ்சிடுமா? உப்பு நட்டம் வந்தா மீனுல லாபம் வரும். மிசின் போட்டு வாங்கிவிட்டிருக்கா. மீனுல நட்டம் வந்தா காடுகரை வச்சிருக்கா. காபித் தோட்டம் வாங்கறா பணம் பணத் தோட சேரச் சேர சுயநலம் அதிகமாகி மணிசாபிமானம் போயிடும் போல இருக்கு. ஒரு கூலின்னு நிர்ணயம் செஞ்சா, எல்லா அளக்காரனும் அதெக் குடுக்கிறrவளா?


SMMMSTSTTS MSMS TASA SSASAS SSSLSSSMSSSMSSS

  • வட்டக் கொப்பி.டவரா தம்ளர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/95&oldid=657648" இலிருந்து மீள்விக்கப்பட்டது