பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன்

எடயில கண்ட்ராக்டுன்றா. ஆடுமாடுங்கன. சப்ள பன்னு றாப்பல தொலாளிங்களை வளிச்சிட்டுப் ப்ணம் பண்றா. மொதலாளிக்கும் தொழிலாளிக்கும் நடுவ இவெ கமிசன் இதுக்குச் சட்டம் கெடயாது. சரிதானேம்மா?” சின்னம்மா வட்டக் கொப்பியைக் கையில் எடுத்துக் கொண்டு “அதுக்கு என்னேயலாம்? . கூலி ரேட்படி குடுக்கிறவங்ககிட்ட மேக் கொண்டு முக்காத்துட்டுக் கிடையாது. மழக்காலம், தீவாளி, பண்டியல் போனசு, சீலன்னு ஒண்னு கெடயாது. மே நாளு, சுதந்தர நாளு வீவுகூடக் கெடயாது. அதுக்கு இது தாவில யில்ல’ என்று கேட்கிறாள்.

“நீங்க எந்த அளம்?’

‘கருவேலக் காட்டு அளம். திருச்செந்துரர் ரோடிை பக்கந்தா. பாலெந்திரும்பினா வந்துடும்; இங்கதா அஞ்க வருசமா வேல. இவியளும் செய்நத்துக்கு வந்தா இப்பவும் லேசா தொழி வார கொள்ள ரெண்டில ஒண்ணில குடுப்பா. வாருபலவை போட்டிட்டு தானிருந்தாவ. கங்காணி ஒருத்தர்னு இல்லாம மாறிட்டே இருப்பம். கால் கொப்புளம் வந்து ஒரு நா, ரெண்டு நான்னா போகாம இருந்தா ஒண்ணில்ல. போன வருசம் இந்தப் புள்ளக்கி பேதி காய்ச்சல் வந்து பத்து நா சோலிக்குப் போகல. கங்காணி வேற ஆள் எடுத்திட்டா. பொறவு. வேற கங்காணி ஒரு ரூவாக் கூலிக் குறச்சிட்டுக் குடுத்தா ஒரு நாளக்கி...என்ன சொல்றியே?’

“என்னத்த சொல்றது? முதலாளியளுக்கு தொழிலாளிய ஒத்துமையில்லாம இருக்கிறதேதா லாபம். யூனியன் தலைவர்னு யாராலும் செல்வாக்கா தலையெடுத்திட்டா, அவனை ஒடனே வாய்க்கரிசி போட்டு, அவம் பக்கம் இழுத்திடறா. சொல்லி பிரேசனமில்ல?”

சாப்பாடு ஆனதும் மாமா கிளம்பிவிடுகிறார்.

-

  • தொழி-தெப்பம்-கசடு தங்கும் முதல் பாத்தி,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/96&oldid=657649" இலிருந்து மீள்விக்கப்பட்டது