பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சரிப்பு மணிகள்

சைக்கிளைத் தள்ளிக் கொண்டு ஒவ்வொரு தொழிலாளியாகத் தேடித் செல்வார்கள். அவர் ஒய்ந்திருந்தே அவன் அதற்கு முன் கண்டிருக்கவில்லை. ஆனால், சிறையில் இருந்து வந்த பின் அவர் பேசியத்ாகவே அவனுக்கு நினைவில்லை. முழங் காலைக் கட்டிக் கொண்டு குடிசைக்குள் உட்கார்ந்: திருந்தார். o

மூன்று நாட்களுக்குப் பிறகு, காலையில் அவர் படுத்த இடம் காலியாக இருந்தது. அக்கம் பக்கமெல்லாம் தேடி னார்கள்.

சண்முகக் கங்காணிதான் அவர்களுக்கு அப்போதெல்லாம் ஆதரவாக இருந்த ஒரே மனிதர். தானுண்டு, தன் தொழி லுண்டு என்று இருப்பவர். அவன் தாயிடம், தங்கச்சி, ஊர்க்குருவி பருந்தாவ ஏலுமா? நாம் ஊர்க் குருவியாலப் பெறந்திருக்கம். இப்படிக் குழந்தைகளையும் குடும்பத்தையும் வச்சிட்டு அவன் இந்த வம்புக்கெல்லாம் போலாமா?” என்பார். அப்பன் அந்த நல்ல நாட்களில் அவரைக் கண்டாலே ஏசுவாராம்.

‘தொட நடுங்கிய, ஒங்களாலதா ஒத்துமையும் விழிப் புணர்ச்சியும் இல்லாத போகுது’ என்பாராம். ஆனால் சண்முகக் கங்காணி அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. அவர்தாம் தேடினார்.

அம்மா திருச்செந்தூர்ப் பக்கம் சோசியரிடம் போய்க் குறி கேட்டு வந்தாள். அவனையும் உடன் அழைத்துச் சென்றாள்.

கறுத்த முடித் தலையில் எண்ணெய் பளபளக்க குங்குமப் பொட்டும் கழுத்தில் பல வகை மணி மாலைகளுமாக அமர்ந்திருந்த சோதிடர், சோழிகளை வைத்துப் பார்த்து அப்பன் இன்னும் மூன்றே நாட்களில் திரும்பி விடுவார் என்றார். ஒரு பெண் பிள்ளை மயக்கு; அவள் குதுதான், வடக்கே போயிருக்கிறார் வந்தாக வேண்டும் என்று புருவங் களை நெறித்து, உதடுகளைக் குவித்து விவரங்கள் மொழிந் தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கரிப்பு_மணிகள்.pdf/99&oldid=657655" இலிருந்து மீள்விக்கப்பட்டது