பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

"இவ்வுல கெலாம் நன்றே ஒருமையுற்று வாழி"
"ஒருமையின் உலகெலாம் ஓங்குக என்றே
ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்"-

இவ்வாறாக ஒரே உலகக் கோட்பாடு கண்ட வள்ளலார், 'சமரச சன்மார்க்க சங்கம்’ என்னும் ‘ஒருமை நன்னெறி இயக்கம் தொடங்கிப் பணி புரிந்தமை உலகறிந்த செய்தி.

பட்டி தொட்டிகளிலெல்லாம் நிறுவனங்கள் அமைத்து மக்கள் தெய்வமாகப் போற்றி வருகிற வள்ளுவரும் வள்ளலாரும் ஒன்றிய உள்ளத்துடன் கண்ட சமூகக் கோட்பாடாகிய ஒரே உலக ஒருமை நன்னெறி இயக்கம் ஓங்கி வளர்க!

நகைச் சுவைப் பகுதி

11. பழமைப் பைத்தியங்களைப்
பார்ப்போமே!

அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த சொரூபியாய்-சச்சிதானந்த ரூபியாய், அண்ட சராசரங்கள் அனைத்திலும் நீக்கமற நிறைந்து நிற்கும் எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருட் பெருக்கினாலே, இந்தச் சபையிலே சப்த சமுத்திரங்களும் திரண்டு வந்தாற்போல் பெருந்திரளாய்க் கூடியுள்ள பேரன்டர்களே! தாய்மார்களே! தந்தைமார்களே! உங்கள் பாதாரவிந்த கமலங்களுக்குப் பணிவான வணக்கம். இப்போது இந்த சத்சங்கத்திலே