பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105

மாள் நாயனார் குதிரையின் மேலும் ஏறிச் சவாரி செய்து விண் வழியாகக் கைலாசம் அடைய வில்லையா! சாதாரண சந்திர மண்டலத்திற்குச் சென்று வருவதற்காக, அப்போலோவுக்குக் கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி அழவேண்டியிருக்கிறதே! சுந்தரர் யானையின் மூலமாகவும் சேரமான் பொருமாள் குதிரையின் மூலமாகவும் ஒரு செலவும் இன்றி அதிலும் அந்த மிருகங்களுக்குத் தீனிச்செலவும் இன்றி மிகவும் எளிமையாகக் கைலாசத்திற்கே சென்றுவிட வில்லையா? இந்த இரு வகையில் எது பெரிய சாதனை? நீங்கள் என்னவோ அப்போலோவைக் கட்டி அழுது கொண்டிருக்கிறீர்களே"- என்று கூறி மேலும் தொடர்ந்துகொண்டிருந்தார் ஒப்பிலாமணி.

பழமையே பேசித் திரியும் ஒப்பிலா மணியவர்களிடம் நாம் பேசி ஒன்றும் உருப்படியாக முடியாது, மண்டை மறைகிற வரையிலும் அவரை யாரும் திருத்த முடியாது. அவரைக் கைகழுவி விட்டுவிட வேண்டியது தான்!

அடுத்தபடியாக, இதோ, நமது பெருமதிப்பிற்கு உரிய இலக்கிய சாமியவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர் என்ன சொல்கிறார் என்று கேட்போமே!:

'வணக்கம் இலக்கிய சாமி'

'வணக்கம் - வணக்கம்'

‘நான் மேல் நாட்டிற்குச் சென்று வந்த பிறகு இலக்கிய சாமியைச் சந்திக்கும் வாய்ப்பு இன்றுதான் கிடைத்தது - உங்களைத்தான் சொல்கிறேன்'.

'என்ன-மேல் நாட்டிற்குச் சென்று வந்தீர்களா? வெள்ளைக்காரன் நாட்டை மேல் நாடு என்றும், நமது நாட்டைக் கீழ்நாடு என்றும் சொல்வதை நான் ஒத்துக் கொள்ள முடியாது. நமது நாடு தான் மேல் நாடு'.