உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயற்கைக் காட்சிப் பகுதி

1. மணிமேகலையில் ஒரு மாலைக்
காட்சி

"மாலை நேரம்- மஞ்சள் வெயில் சாயும் வேளை . ‘காதலர் பூங்கா' வில் காதலனும் காதலியும் களிப்புடன் அளவளாவத் தொடங்கினர். அந்த நேரம் பார்த்து, ‘சிவபூசனையில் கரடி விட்டாற் போல்', மழை 'பிசுபிசு’ என்று பெய்யத் தொடங்கியது’-இப்படிப் போல எத்தனையோ மாலைக் காட்சிகளைக் கதைகளில் படித்திருக்கலாம். இதோ ஒரு புதிய காட்சி:

காவியக் காட்சி

ஒர் அன்னச் சேவலும் அதன் பெடையும் ஒரு தாமரைப் பொய்கையில் வாழ்ந்து வந்தன. இரண்டும் இணை பிரியாது ஆடியும் ஒடியும் நீந்தியும் பறந்தும் களிப்பது வழக்கம். ஒருநாள் பொழுது சாயும் வேளை-பெடையானது, விரிந்திருந்த ஒரு பெரிய தாமரை மலரில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது மாலை நேர மாதலின், தாமரை மலர் தன்மேல் விளையாடித் கொண்டிருந்த அன்னப் பெடையையும் சேர்த்து முடிக் கொண்டது. மாலையில் தாமரை மலர் கூம்பிக் குவிவது இயற்கைதானே!

பெடைக்கோ ஒன்றும் ஒடவில்லை. எங்கிருக்கிறோம்எப்படி இந்த இருட்டறையில் அகப்பட்டுக் கொண்டோம்