பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

'சர்வ ஜீரணானந்த சுவாமிகளே! இந்தக் காடு சுற்றிக் கழுவெளி யானந்தர், ஏதோ திருவோடு ஏந்திக் கொண்டு தெருவோடு வந்துவிட்டார் என்று மட்டமாக மதிக்கிறீர்களா? எங்கள் அப்பன் - பாட்டன் வாழ்ந்த பெருவாழ்வு தெரியுமா உங்களுக்கு? அந்தக்காலத்தில், சைகோனிலே ஒரு தெரு முழுவதும் எங்கள் தாத்தாவுக்குச் சொந்தமாக இருந்ததாம்.'

'ஓகோ! அப்படி யென்றால், அந்தத் தெரு முழுவதும் உங்கள் தாத்தா மட்டுந்தான் பிச்சை எடுக்கலாமா?'

'நான் அந்த அர்த்தத்தில் சொல்ல வில்லை சர்வ ஜீரணானந்த சுவாமிகளே! உங்களுக்குப் பிச்சை எடுக்கும் புத்தியே எப்போதும் முனைப்பாயிருக்கிறது! சைகோனிலே ஒரு தெரு முழுவதும் எங்கள் தாத்தாவுக்குச் சொந்தம் என்றால், அந்தத் தெருவில் உள்ள வீடுகள் எல்லாம் எங்கள் தாத்தாவின் சொந்த உடைமையாம். தாத்தா இருக்கட்டும்! எங்கள் அப்பாவுக்குப் பர்மாவிலே ஒரு பெரிய எஸ்டேட்டே இருந்ததாம். நான் சின்ன வயதிலே தண்ணீரே குடித்ததில்லையாம். தண்ணீருக்குப் பதில் பசும்பால் தான் எனக்குத் தருவார்களாம். சோறே எனக்குத் தெரியாதாம், பாதாம் அல்வா -பாதாம் பர்பி- பாதாம் பூரி - எல்லாம் 'பாதாம் பாதம்' தானாம் எனக்கு! என்னவோ என் தலைவிதி- இப்போது மக்கிப் போன பழையதுகூட போடமாட்டேன் - என்கிறார்கள்'-

காடு சுற்றிக் கழுவெளி யானந்தரின் இந்தப் புலம்பலை யடுத்து, சர்வ ஜீரணானந்த சுவாமிகள் தொடங்குகிறார்.

'இதைச் சொல்கிறீர்களே கழுவெளி யானந்தரே! இந்தச் சர்வ ஜீரணானந்த சுவாமிகளின் பெருமையைச் சொன்னால், அப்படியே அசந்து போய் விடுவீர்கள்மூச்சைக் கீழே போட்டு விடுவீர்கள், அந்தக் காலத்தில்