பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

ஒரு பெரிய கலை உணர்வாகும். இத்தகைய செய்யுள் தொகுப்புக் கலையுணர்வு, மக்களினத்தின் ஒரு பிரிவினரிடையே பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இருந்ததெனின், அந்தப் பிரிவினர் பெரிதும் பாராட்டுதலுக்கு உரியவ ராவர்.

ஆந்தாலஜி (Anthology)

செய்யுள் தொகுப்புக்கலை ஆங்கிலத்தில் ’ஆந்தாலஜி’ (Anthology) எனவும், பிரஞ்சில் ஆந்தொலொழி’ (Anthologie) எனவும், இலத்தீனில் ஆந்தொலொழியா (Anthologia) எனவும் பெயர் வழங்கப்படுகிறது. இப் பெயர்கள், 'ἀνθολογία' என்னும் கிரீக் சொல்லிலிருந்து வந்தவையாகும். இந்த கிரீக் சொல்லுக்கு (ஆந்தொலொழியா) மலர்த் தொகுப்பு-மலர் மாலை (Flower gathering) என்று பொருளாம். பாமாலை என்னும் தமிழ் வழக்காறு ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.

உலகத் தொகை நூல்கள்:-

கிர்க் மொழியில் கி.மு. முதல் நூற்றாண்டில், மெலீகர் (Meleagar) என்னும், கிரேக்க அறிஞர் தம் பாடல்களுடன் பிறர் பாடல்களையும் தொகுத்து 'மெலிகர் மாலை' (Garland of Meleagar) என்னும் பெய்ரில் முதல் தொகை நூலை உருவாக்கினார். இலத்தீனில் கி.பி. ஐந்தாம் நூற் றாண்டில் ‘ழோன்னெஸ் ஸ்டோபேயுஸ் (Joannes Stobaeus) என்பவரால் செய்யுளும் உரைநடையும் கலந்த ஒரு தொகைநூலும், சம்சுகிருதத்தில் பத்தாம் நூற்றாண்டில் ‘கவிந்த்ர வசன சமுச்சயம்’ என்னும் தொகை நூலும், பிரெஞ்சில் பதினாறாம் நூற்றாண்டில் ’துய்பெல்லா’ (Joachin du Bellay) என்னும் பிரஞ்சு அறிஞரால் “Voeu d’un Vanneur De Ble Aux Vents’ (காற்றில் கோதுமை தூற்றிக் கொழித்தெடுப்பவனது விருப்ப