பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

குறையாதவற்றை ஒரு நூலாகவும், படித்தடிக்குமேல் இருபதடிக்குக் குறையாதவற்றை இன்னொரு நூலாகவும் இருபதடிக்கு மேற்பட்டவற்றை மற்றொரு நூலாகவும் தொகுத்திருக்கலாமே எனின்,-இந்த அடிவரையறையின் படி செய்தால், நானுாறு பாடல்கள் வீதம் என்ற ஒத்த எண்ணிக்கை தேறாமற் போகும். எனவேதான் இப்போதுள்ள முறை பின்பற்றப்பட்டது. நெடுந் தொகை என்னும் பெயர்க்காரணம் இப்போது விளங்கலாம்.

தொல்காப்பியத்தில், பாக்களுள் ஆசிரியப் பாவே முதலில் கூறப்பட்டிருத்தலானும், புறத்தினும் அகமே முதலில் பேசப்பட்டிருத்தலானும், எட்டுத் தொகை நூல்களுள் ஆசிரியப்பாவால் ஆன நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை என்னும் அகப் பொருள் நூல்கள் முதலிடம் பெற்றன. இவற்றுள்ளும் அடியளவால் நீண்டிருத்தலின் நெடுந்தொகை முதன்மை பெற்றது.

எண் முறை:

நெடுந்தொகை தொகுத்த முறையில் வியத்தற்கும் நயத்திற்கும் உரிய வேறொரு கலைத்திறன் உள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்தும் அகன் ஐந்திணைகள் எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார். இந்த அகன் ஐந்திணைகளையும் பற்றியது நெடுந்தொகை. இந்நூலிலுள்ள நானுாறு பாடல்களையும் ஐந்திணைகளுக்கும் பங்கிட்டு எண் இட்டு வரிசைப்படுத்தி யிருக்கும் முறை ஓர் அருங்கலைச் செயலாகும்.

நானுாறு பாடல்களில் நாற்பது பத்துப்பாடல்கள் (10x40=400) உள்ளன. ஒவ்வொரு பத்திலும் ஒற்றைப் படையாக உள்ள ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என்னும் எண்கள் கொண்ட பாடல்கள் பாலைத்திணைக்கு