பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

உலக மொழிகள் பலவற்றிலும் எழுந்த கற்பனை கலந்த அல்லது முற்றிலும் கற்பனையான புராண இதிகாச-காவியங்களும் வரலாறு போலவே கருதப்பட்டன. இவ்வாறாக, இலக்கியங்கள் வரலாறு போலவும் வரலாறுகள் இலக்கியங்கள் போலவும் தலைதடுமாறிக் காட்சி யளிக்கலாயின.

2-1. வேறுபாடு:

ஒரு சிறிதும் கற்பனை கலவாது நடந்ததை நடந்தபடி அப்படியே அளிப்பது வரலாறு. மக்களினம் இப்படி வாழ வேண்டும்என அறிவுறுத்துவதற்காக, நடவாததை நடந்ததாகவோ,நடந்ததையே கூட இடையிடையே கற்பனை கலந்தோ தருவது இலக்கியம். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு இது எனலாம்.

வரலாற்றாசிரியன் எந்தச் சார்பும் இன்றி விழிப்புடன் நிகழ்ச்சிகளைத் துல்லியமாகத் தரக் கடமைப்பட்டவன். அவன், நிகழ்ச்சிகட்கு ஒரு சார்பு பற்றி ஏதேனும் சாயம் பூசத் தெடங்குவானேயாயின், அவனது படைப்பு வரலாறு ஆகாமல் இலக்கியம் எனப் பெயர் பெற்றுவிடும். முன்னரும் ஒரு கட்டுரையில் கூறியுள்ள இந்த அடிப்படை உண்மை களைக் கருத்திற் கொண்டு, ‘பாரதி இலக்கிய வரலாறு’ என்னும் தலைப்பினை ஆய்வு செய்யவேண்டும்.

3. முக் கூற்று விளக்கம்:

தொடக்கத்தில் கூறியுள்ள முக்கூறுகளுள்முதலில் முதல் கூறினை எடுத்துக் கொள்வோம்:

3-1 முதல் கூறு: இலக்கியங்களைப் பற்றிப் பாரதியார் கூறியுள்ள வரலாற்றுக் குறிப்பு முதல் கூறு. இலக்கியங்களின் வரலாறு என்பதில் மொழி வரலாறும் தன்னில் தானே அடங்கும். இதனை, 'தமிழ் மொழி இலக்கிய-