பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

“இனிமை தழுவிய சாயலை உடையவர்" (நச்சி
                                                  னார்க்கினியரின் உரை
"தமிழினும் இனிய மென்மைய வாகி” (கூர்மபுராணம்
                                                  - வானவர்-13)
“இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்" (பிங்கல
                                                 நிகண்டு -3610

இன்ன பிற ஆட்சிகளால் அறியலாம்.

3-1-2,

அடுத்தது, தமிழ்ச் சொல் உயர்ந்தது என்னும் கருத்து. இலங்கை ஞானப் பிரகாச அடிகளார், . (Rev.S. Gnana Prakasar,0.M.I.) தமது சொற்பிறப்பு-ஒப்பியல் தமிழ் அகராதி' (An Etymological and Comparative lexicon of the Tamil Language) என்னும் நூலில், தமிழ்ச் சொல்லோடு ஒத்த சொல் உருவங்கள் மற்ற - இந்திய மொழிகளிலும் இருப்பதை எடுத்துக் காட்டியுள்ளார். அவர் நூல் முன்னுரையில் பின்வருமாறு கருத்துக் கூறியுள்ளார் :

"தமிழ்ச் சொற்கள், முதல் முதல் மக்களினத்தில் மொழி தோன்றத் தொடங்கிய காலத்தில் எழுந்த சொல்லொலிகளை அடிப்படையாகக் கொண்டவை. தமிழ்ச் சொற்களால் உணர்த்தப்படும் கருத்துகள், மக்களினத்தின் பொதுப் பண்பைக் குறிக்கும் அடிப்படையாகும்; எனவே, கூர்ந்து ஆராயின், தமிழ்ச் சொற்களின் வேரி லிருந்தே உலக மொழிகளின் சொற்கள் தோன்றிப் பல்வேறு வடிவம் கொண்டன என்பது புலப்படும்".

ஞானப் பிரகாசரைப் போலவே, ஆச்சுபோர்டு பேராசிரியர் டி.பர்ரோ (T.Burrow ) என்பவரும் கலிபோர்னியா பேராசிரியர் எம்.பி. எமினோ (M.B. Emeneau )