பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

127

என்பவரும் இணைந்து தொகுத்த, 'A Dravidian Etymological Dictionary' என்னும் நூலில், தமிழ்ச் சொற்களோடு ஒத்த உருவம் உடைய பிற திராவிட மொழிச் சொற்கள் இந்தோ - ஐரோப்பியக் குடும்ப மொழிச் சொற்கள் ஆகிய வற்றைத் தந்துள்ளனர். 'சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே' என்று பாரதி கூறியிருப்பது சரிதானே! ஈண்டு அசைவில் செந்தமிழ்வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல" என்னும் பெரிய புராணப் பாடல் (1927) பகுதி ஒப்பு நோக்கற் பாலது.

3-1-3.

மூன்றாவது கருத்து, தமிழ் அனைத்தும் - அளந்தது - அறிந்தது - பரந்து பட்டது என்பதாகும். இதற்குத் துணை செய்வன, “ஞாலம் அளந்த மேன்மை தெய்வத் தமிழ்' (975), "புவி ஏத்தத் தெருள் பொழி வன் தமிழ்," (3699) என்னும் பெரிய புராண ஆட்சிகளும், 'தமிழ் எனும் அளப்ப ரும் சலதி' (சலதி= கடல் ) என்னும் கம்ப ராமாயண ஆட்சி யும் இன்ன பிறவுமாம், மற்றும், 'தமிழ்த் தாய்' என்னும் தலைப்பில், தமிழ் - மொழியின் தோற்றம் முதற் கொண்டு அதன் வளர்ச்சி வரலாற்றைச் சுருக்கமாகப் பன்னிரண்டு பாடல்களில் பாரதியார் தந்துள்ளார். அவற்றுள் சில :-

“ஆதி சிவன் பெற்று விட்டான்.......
    அகத்தியன் இலக்கணம் செய்து கொடுத்தான். (1)

மூன்று குலத் தமிழ் மன்னர் - என்னை
    மூண்டநல் லன்பொடு நித்தம் வளர்த்தார். (2)

தெள்ளு தமிழ்ப் புலவோர்கள் - பல
      தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார். (3)