உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129

செந்தமிழ் நாடு:

“கல்வி சிறந்த தமிழ் நாடு-புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ் நாடு-நல்ல

பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்

பாரெங்கும் வீசும் தமிழ்நாடு’(6)

“வள்ளுவன் தன்னை உலகி னுக்கே-தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை

அள்ளுஞ் சிலப்பதி காரமென்றோர்-மணி

ஆரம் படைத்த தமிழ்நாடு”(7)
தமிழ்ச் சாதி:

”சிலப்பதி காரச் செய்யுளைக் கருதியும்
திருக்குறள் உறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விரிவும் அழகும் கருதியும்,
எல்லையொன் றின்மை எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும்
முயற்சியைக் கருதியும் முன்பு நான் தமிழ்ச்
சாதியை அமரத் தன்மை வாய்ந்த தென்று
உறுதிகொண் டிருந்தேன்" (அடிகள்: 20-27)

மேற்காட்டியுள்ள பாடல் பகுதிகளால், திருக்குறள் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பல சாத்திர நூல்கள் ஆகியவற்றின் சிறப்பை அறிவித்துள்ளமை தெளிவு.

4. இரண்டாம் கூறு:

இனி, முக் கூறுகளுள், ’பாரதியின் இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள உலக வரலாற்றுக் குறிப்புகள்’ என்னும் இரண்டாங் கூறு பற்றிக் காண்பாம்: இதில், தமிழர்