பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131

சுப்பராம தீட்சதர், மகா மகோ பாத்தியாய சாமி நாதர், வேங்கடேச ரெட்டப் பூபதி முதலியோர் பற்றித் தனித் தனித் தலைப்பு பலவற்றில் பாரதியார் பல செய்திகள் தந்துள்ளார். வெள்ளைக்கார விஞ்சு துரை பற்றிய செய்தியும் வேல்சு இளவரசருக்குக் கூறிய வரவேற்புங்கூட இடம்பெற்றுள்ளன. சுய சரிதை என்னும் தலைப்பில், பாரதியார் தமது சொந்த வாழ்க்கை வரலாற்றையும் சுருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

4-4. இந்திய நாட்டு வரலாறு:

மா பாரத இதிகாசத்தின் கதைத் தலைவி என்று சொல்லலாம் போல் தோன்றுகிற பாஞ்சாலியின் வரலாற்றைப் “பாஞ்சாலி சபதம்" என்னும் சிறு காப்பியமாக வடித்துத் தந்துள்ளார். இஃது இந்திய நாட்டு வரலாற்றிற்கு உட்பட்டதாகும்.

வந்தே மாதரம், பாரத நாடு, பாரத தேசம், நாட்டு வணக்கம், பாரத நாடு, எங்கள் நாடு, பாரத மாதா, எங்கள் தாய், வெறி கொண்ட தாய், பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி, பாரத மாதா நவரத்தின மாலை, பாரத தேவியின் திருத் தசாங்கம், தாயின் மணிக்கொடி, பாரத சமுதாயம், சாதீய கீதம், சுதந்திரம் முதலிய தலைப்புகளில் இந்திய நாட்டு நிலைமை விளக்கப்பட்டுள்ளது.

4-5. சுதந்திரப் பள்ளு:

விடுதலை வேட்கையின் போதை உச்சந் தலைக்கு ஏறி விட்ட பாரதியார், அந்த விடுதலை வேட்கை யுணர்ச்சியை இமயத்தின் உயரிய கொடுமுடி அளவுக்கு உயர்த்தி விட்டார். அதாவது, விடுதலை பெறுவதற்கு முன்பே விடுதலை பெற்று விட்டதாக ஆடுகிறார்-பள்ளு பாடு-