பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தது. வரலாறு என்னும் பெயரால்பாரதியார் கூறியிருப்பனவன்றி, பொதுவாகக் கூறியிருக்கும் மற்ற தலைப்புப் பாடல்களும் ஒரு வகையில் வரலாறாகும். இவற்றால், பாரதியார் காலத்திய மக்கள் நிலையும்நாட்டுநிலையும் உலகநிலையும் தெரியவரும். கல்வி, மொழி நிலை, மெய்யறிவு, சமயம், கடவுட்கொள்கை, சமூகம், பெண்கள் நிலை,நாகரிகம், பண்பாடு,ஆட்சி, ஆண்டான்-அடிமை நிலை, தொழில், மக்கள் வாழ்க்கை நிலை முதலியவற்றை ஓரளவேனும் அறிந்து கொள்ள வியலும். இதனால் இலக்கியமே ஒரு வரலாற்று நூல் எனப்படும்.

5-2. எதிர் காலப் பயன்

கடந்த கால இலக்கியமோ வரலாறோ படிப்பது எதிர்காலப் பயனுக்காகும். நேற்று என்பதே வரலாறாகி விடுகிறது (Yesterday is History). கடந்த காலத்துக்கும் எதிர் காலத்துக்கும் உள்ள தொடர்பு, தந்தை-மைந்தனுடைய தொடர்பு போன்ற தன்று தமையன்-தம்பியின் தொடர்பு போன்றதும் அன்று, ஒரே மாந்தருடைய இளமையும் முதுமையும் போன்ற தொடர்புடையதாகும். அதனால், பாரதி தரும் இலக்கிய வரலாற்றுப் படிப்பினையைக் கொண்டு எதிர் காலத்தைத் திட்டமிட வேண்டும்.

5-2-1. புரட்சிப் பொழிவு:

எதிர்காலத்தினைத் திட்டமிட்டு வாழப் பாரதியின் புரட்சிப் பொழிவுகளைப் பார்க்க வேண்டும். புரட்சிப் புயல் என்பர் சிலர். புயல் கேடு செய்யும்: பொழிவே நலம் பயக்கும். பாரதியாரின் புரட்சிகளுள் தலையாயவை, சாதி மத வேறுபாட்டைச் சாடுதல், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கண்டித்தல், பெண்ணுரிமை, தொழிற்-