பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்-
-வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம்.”

என்றெல்லாம் பொருளியல் புரட்சியும் தொழிற் புரட்சியும் செய்துள்ளார்.

உழைக்காதவனுக்கு உயிர் வாழ உரிமையில்லை யல்லவா?

புதுமைப் பெண், பெண்கள் வாழ்க, பெண்கள் விடு தலைக் கும்மி, பெண் விடுதலை-என்னும் தலைப்புகளில் பெண் விடுதலையை-பெண் உரிமையை வற்புறுத்தியுள்ளார்.

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்.”
“வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ
மென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்’’.

“வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.”

என்றெல்லாம் கனல் கக்கும் பாடல்களால் பெண்ணுரிமையைப் பேணியுள்ளார்.

5-3. காலக் கண்ணாடி:

பாரதியின் இலக்கியம் ஒரு காலக் கண்ணாடியாகும். ஓர் எடுத்துக் காட்டு வருமாறு:

ஒளவையார் ஆத்தி சூடியில் கூறியுள்ள 'முனை முகத்து நில்லேல்’ என்னும் கருத்துக்கு மாறாக, பாரதியார் 'முனையிலே முகத்து நில்’ என்று தமது ஆத்திசூடியில் கூறியுள்ளார். இதைக் கொண்டு, சிலர், ஒளவையைத்-