பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

141


வரலாற்று இலக்கியப்பகுதி

14. முதல் கலம்பகம்

கலம்பகம்:

கலம்பக நூல்களுக்குள் முதல்கலம்பகம் நந்திக்கலம்பகமாகும்.

இந்த நந்திக் கலம்பகம் தமிழிலக்கிய வரிசையில் மிகவும் விதந்து சிறப்பித்துக் குறிப்பிடத்தக்க தொரு நூல். நந்தி வர்மன் என்னும் பல்லவ மன்னன்மேல் பாடப் பெற்ற கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த சுவையான நூல் இது.

தமிழில் தொண்ணுற்றாறு வகைச் சிற்றிலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று கலம்பகம். கலம்பகம் என்னும் சொல்லுக்குக் கலவை-கலப்பு-கதம்பம் என்று ஒருவிதமான பொருள் கூறப்படுகிறது. பல்வேறு வகைப் பாடல்களின்-பல்வேறு வகைத் தலைப்புகளின் கலவை யாய் இந்நூல் காணப்படுவதால் இப்பொருள் பொருத்த முடையதாகத் தோன்றுகிறது.

கலப்பு+அகம்=கலப்பகம்-அது கலம்பகம் என்றாயிற்று என்பர் ஒரு சிலர்.இலக்கண மரபுப்படி இது பொருந்தாது என்று மறுப்பர் வேறு சிலர். கலம் என்றால் பன்னிரண்டு; பகம் என்றால் ஆறு, கலம்பகம் என்றால் பதினெட்டு; எனவே, பதினெட்டு வகை உறுப்புகள் கொண்ட நூல் கலம்பகம் என்பர் ஒரு சாரார். சில கலம்பக நூல்களில் பதினெட்டுக்குங் குறைவாகவும் வேறு சிலவற்றில் , பதினெட்டிற்கும் மிகுதியாகவும் உறுப்புகள் காணப்படுவ-