பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/148

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

கதை நாடறியும்' என அறிவித்திருப்பதும் இன்ன பிறவும் சான்றாகக் காட்டப் படுகின்றன. ஆனால் இந்த வரலாறு முழுவதையும் அப்படியே ஒத்துக் கொள்வதற்கில்லை.

கதைக்கு மறுப்பு: -

நந்தியின் தம்பிமார்கள் அவனோடு முரணியது என்னவோ உண்மையாயிருக்கலாம். இதற்கு நந்திக் கலம்பகத்திலேயே கூடச் சான்று உள்ளது. நூலின் எண்பத்தோராம் பாடலில் உள்ள

தம்பியர் எண்ணமெல்லாம் பழுதாக வென்ற
தலைமான வீரதுவசன்

என்னும் பகுதி ஈண்டு எண்ணி ஆராயத்தக்கது. இன்னும் சொல்லப் போனால், நந்திக் கலம்பகத்தை நந்தியின் தம்பியருள் ஒருவன் எழுதவில்லை என்பதற்கு, தம்பியர் எண்ணமெல்லாம் பழுதாக வென்ற தலைமான வீரதுவசன் என்னும் கலம்பகப் பாடற் பகுதியே சான்றாகப் போதும். அதாவது, ‘தம்பிமர்ர்களின் எண்ணங்கள் எல்லாம் பழுதாகும்படி வென்றவன்’ எனப் பகை கொண்ட தம்பியொருவன் பாடியிருக்க முடியவே முடியாது. அங்ஙனமெனில் இதிலுள்ள உண்மை யாதாயிருக்கலாம்?

உண்மை வரலாறு:

நந்திக் கலம்பகத்தை நோக்குங்கால் நந்தியை அழிக்க வேண்டும் என்னும் தீய நோக்குடன் நூல் பாடப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக நந்தியின் பெருமையைப் பரக்கப் பேசுகிறது இந்நூல். நந்தியின் வெற்றியினையும் பல்வேறு புகழினையும் விரிவாக விளம்புகிறது இந்நூல் இந்த நூலில் அந்தக் குற்றம் இருக்கிறது-இந்தக் குற்றம் இருக்கிறது என்றெல்லாம் சிலர் என்னென்னவே குற்றங்-