பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

பெடை கொண்டு :

அடுத்து, 'பெடை கொண்டு' என்னும் தொடரை நோக்க வேண்டும், ஏதோ மூட்டை முடிச்சையோ -அல்லது சிறு குழந்தையையோ எடுத்துக் கொண்டு -தூக்கிக் கொண்டு செல்வதைப் போல, சேவலன்னம் பெடையன்னத்தைக் கொண்டு சென்றது என்னும் குறிப்புப் பொருள் இத்தொடரில் புலப்படுகின்றதன்றோ? உண்மையில் அப்படியா நடந்திருக்க முடியும்? பெண் அன்னமும் பறந்துதான் சென்றிருக்கும். ஆயினும், நெடுநேரம்வரை இதழ்களுக்குள் அடைபட்டுக்கிடந்து பெடை நொந்துபோயிற்று என்னும் பரிவால்-பற்றுணர் வால் அதனை ஏந்தி எடுத்துக்கொண்டு செல்வதுபோல் சேவலன்னம் நெருங்கித் தாங்கினாற்போல் சென்றுள்ளது என்னும் நயத்தைப் 'பெடைகொண்டு’ என்னும் தொடர்நல்குகின்றது.

உயிர்களின் இயற்கை:

அடுத்தபடியாக, 'ஒங்கிருந் தெங்கின் உயர் மடல் ஏற’ என்னும் நயஞ் செறிந்த தொடரை நன்கு நோக்க வேண்டும். தண்ணிரிலே-தாமரையிலே பொழுது போக்கிக் கொண்டிருந்த அன்னங்கள் தாமரை மலரால் ஏற்பட விருந்த உயிரிழப்பினின்றும் தப்பிப் பிழைத்தபிறகு யாது செய்தன? நாம் என்ன செய்வோம்? அஞ்சத்தக்க இடர்ப் பாடான இடத்தில் சிக்கித் தவித்து உயிருக்குப் போராடிய எந்த உயிரினமும் அவ்விடத்தை விட்டு நெடுந் தொலைவிற்கு அப்பால் அகல முயல்வது இயற்கைதானே! அவ்வாறே இந்த அன்னங்களும், தங்களைத் தவிக்கச் செய்த தாமரையை விட்டு-அந்தத் தாமரை இருக்கும் தண்ணிரில் நீந்தியும் மிதந்தும் வாழ்வதையும் விட்டு, அத் தண்ணிரின் அருகிலுள்ள தரையையும் விட்டு, அத்-