பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152


மறம்

"அம்பு ஒன்று, வில் ஒடிதல், நாண் அறுதல்,
நான் கிழவன், அசைந்தேன் என்றோ
வம்பொன்று குழலாளை மணம்பேசி
வரவிடுத்தார் மன்னர் தூதா!
செம்பொன்செய் மணி மாடத் தெள்ளாற்றில்
நந்திபதம் சேரார் ஆனைக்
கொம்பன்றோ நம்குடிலில் குறுங்காலும்
நெடுவளையும் குனிந்து பாரே"

அடுத்து நந்தியின் வெற்றிச் சிறப்பைக் கூறும் பாடல் ஒன்று, வெற்றி முழக்கத்திற்குரிய ஓசை மிடுக்குடன் அமைந்திருப்பதைக் கட்டாயம் பாடிச் சுவைத்தே தீர

வேண்டும். பாடல் இதோ:

“திறை இடுமின் அன்றி மதில்விடுமின் நுங்கள்
செரு ஒழிய வெங்கண் முரசம்
அறை விடுமின் இந்த அவனிதனில் எங்கும்
அவனுடைய தொண்டை அரசு
நிறைவிடுமின் நந்தி கழல் புகுமின் நுங்கள்
நெடுமுடிகள் வந்துநிகளத் (து)
உறைவிடுமின் அன்றி உறைபதிய கன்று
தொழுமினல துய்த லரிதே".

இவ்வாறு பல்வேறு பயன்கள் பொதிந்த நந்திக் கலம் பகம் நன்கு ஆய்ந்து கற்கத்தக்கது. நூலின் நோக்கம் எது வாயினும், ஒன்பதாம் நூற்றாண்டுத் தமிழக வரலாறு நாட்டிற்குக் கிடைக்கச் செய்த நந்திக் கலம்பக ஆசிரியர் நன்றிக்கு உரியவரே,