பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155

என்னும் குறளில் பொதிந்து கிடக்கிற தல்லவா? இதிலிருந்து இன்னொரு கருத்தும் தெரிய வருகிறது."எவ்வளவு செல்வம் பெற்றிருப்பினும், இன்னொருவரிடம் சென்று ஓர் உதவிநாடுபவர் ஏழையாகவே கருதப்படுவர்-என்பதுதான் அந்தக் கருத்து.

ஆனால், உலகச் சமுதாய வாழ்க்கையில் வாணாள் முழுதும் ஒரு முறையாயினும் ஒருவரிடமாயினும்-ஓர் உதவியாயினும் நாடாமல் இருப்பது எவர்க்கும் இயலாத தொன்றாகும்-என்னும் இமாலயப் பேருண்மை தெரியாமல் இல்லை-புரியாமல் இல்லை. எனினும், இயன்றமட்டும் இன்னொருவரிடம் சென்றுயாதோ ருதவியும்வேண்டா திருப்பதே சாலச் சிறந்தது என உறுதியாக உணர்ந்து, அதற் கேற்ப முயன்று உழைத்துத் தம் சொந்தக் காலில் நிற்கப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த ஆற்றல் பெற்றவர் ஒன்றும் இலராயினும் கோடீசுவரரே யாவார் என்பது வள்ளுவர் கருத்து என்றாலும், கோடியின் பெறுமான் அளவை வள்ளுவர் அறியாதவர் அல்லர்.

'ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியும் அல்ல பிறபிற' (337)

‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’(377)

'அடுக்கிய கோடி பெறினும் குடிப் பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்’-(954).

‘கொடுப்பது உம் துய்ப்பது உம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல்’-(1005)

முதலிய குறள்களால், வள்ளுவர் உணர்ந்துள்ள கோடியின் பெறுமான மதிப்பு நமக்குப் புரியாமற் போகவில்லை.